சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய அரசின் சுகாதார அமைச்சகமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து பருவநிலை மற்றும் சுகாதாரத் தீர்வுகள் குறித்த மாநாட்டை நடத்தின
Posted On:
27 SEP 2024 1:07PM by PIB Chennai
மத்திய அரசின் சுகாதாரம், குடும்பநல அமைச்சகமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து பருவநிலை மற்றும் சுகாதார தீர்வுகள் இந்தியா மாநாடு என்ற தலைப்பில் 2 நாள் மாநாட்டை தில்லியில் நடத்தின. இந்த இரண்டு நாள் மாநாட்டில், பருவநிலை மாற்றம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான அவசர நிலைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள், சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
தொற்றா நோய்கள், மனநலம், ஊட்டச்சத்து, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற தயார் நிலையிலான சுகாதார மனித வளங்கள், பருவநிலை, சுகாதார அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்து பங்கேற்பாளர்கள் ஆழமான விவாதங்களில் ஈடுபட்டனர்.
ஆந்திரா, அசாம், குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் வட்டமேசை விவாதம் 2-வது நாளில் நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வ சந்திரா, பருவநிலை மற்றும் சுகாதார தீர்வுகள் மாநாடு பொது சுகாதாரத்துடன் இணைந்த நெருக்கடிகளை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. கூட்டு நடவடிக்கைகளின் வலிமையால் இவற்றை எதிர்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். பருவநிலையுடன் இணைந்த சுகாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தக்கூடிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
----
PLM/KPG/KR/DL
(Release ID: 2059546)
Visitor Counter : 59