பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்க கருத்தரங்கு

Posted On: 27 SEP 2024 9:56AM by PIB Chennai

சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் குறித்த இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் (IORA) கருத்தரங்கின் இரண்டாவது பதிப்பு 25 செப்டம்பர் 24 அன்று கோவாவின் கடற்படை போர் கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்த மீன்பிடி நடவடிக்கைகள், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு களத்தில் அதன் தாக்கங்கள் மற்றும் உறுப்பு நாடுகளால் தொடரக்கூடிய இந்த நடவடிக்கைகளைக் கையாள்வதில் உள்ள சட்ட வெற்றிடங்கள் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டன.

 

..ஆர்..வில் வளர்ந்து வரும் .யு.யு மீன்பிடி அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரச்சினை அடிப்படையிலான விவாதங்களில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, கென்யா, மடகாஸ்கர், மொசாம்பிக், மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், ஓமன், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சீஷெல்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் தான்சானியா உள்ளிட்ட 17 ..ஆர். நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

***

(Release ID: 2059304)
PKV/RR/KR


(Release ID: 2059325) Visitor Counter : 40