மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 8-வது இந்திய நீர் வாரம் 2024 கண்காட்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை பங்கேற்கிறது

Posted On: 21 SEP 2024 12:03PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 8-வது இந்திய நீர் வாரத்தை 2024 செப்டம்பர் 17, 2024 அன்று புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். 2024 செப்டம்பர் 17 முதல் 20 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 8-வது இந்திய நீர் வாரம் 2024 கண்காட்சியில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை  பங்குதாரர் துறையாக பங்கேற்றது.

கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கண்காட்சி, "கால்நடை துறையில் நீர் தடம்" மற்றும் இந்திய சூழ்நிலையில் கால்நடைகள் மற்றும் கோழி உற்பத்தியில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியது. அதன் அரங்கில்  துறையால்  செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டங்கள் மற்றும் அதன் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தக் கண்காட்சி நிலையான வளர்ச்சி இலக்குடன் ஒத்துப்போகிறது, இது அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் கிடைப்பதையும் நிலையான நிர்வாகத்தையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜல் சக்தி அமைச்சகம் 17-20 செப்டம்பர் 2024 வரை இந்திய நீர் வாரம்-2024 ஏற்பாடு செய்த முன்னணி அமைச்சகமாகும். இந்த நிகழ்வு உலக அளவிலான முடிவெடுப்பவர்கள், அரசியல்வாதிகள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் திட்டமிடுபவர்களிடமிருந்து யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்கான உலகளாவிய தளமாக செயல்பட்டது.

----

PKV/KV



(Release ID: 2059021) Visitor Counter : 5