ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், புதுதில்லியில் பாலின முதன்மை நீரோட்டம் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது
Posted On:
21 SEP 2024 11:02AM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பாலின நீரோட்டம் குறித்த தேசிய மாநாட்டை புதுதில்லியில் நேற்று நடத்தியது. இந்த மாநாடு பாலின பாகுபாடுகளைக் களையும் சமூக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
ஊரக பொருளாதாரத்தில் அரசின் ஈடுபாடு, சமூக-பொருளாதார உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளித்தல் மூலம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் வலியுறுத்தினார். தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் 'முழு அரசு அணுகுமுறையை' ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இப்போது, களத்தில் உள்ள குரல்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் நமது பாலின உத்திகளைக் கூர்மைப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில், பல்வேறு தலைப்புகளில் நான்கு குழு விவாதங்கள் இருந்தன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், எஸ்.ஆர்.எல்.எம்., அதிகாரிகள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பாலின வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூக பங்காளிகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
ஊதியம் பெறாத வேலை, பாலின உழைப்புப் பிரிவினை, ஊதிய இடைவெளிகள் மற்றும் விவசாயத்தில் உரிமை இல்லாமை உள்ளிட்ட பெண்களின் அதிகாரமளிப்பதற்கான தடைகள் குறித்து முக்கிய விவாதங்கள் கவனம் செலுத்தின.
பாலினம் என்பது வாழ்வாதாரங்கள் மற்றும் நிறுவன வழிமுறைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சினை என்றும் குறிப்பிடப்பட்டது. ஆண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இதில் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை விவாதங்கள் வலியுறுத்தின. குடும்பங்களுக்குள் பாலின சமத்துவத்தை வளர்ப்பதிலும், விவசாயம் மற்றும் உள்ளூர் நிறுவனங்களில் பெண்களின் தலைமையை ஊக்குவிப்பதிலும் சுய உதவிக் குழுக்களின் பங்கு கொண்டாடப்பட்டது.
நிறுவன வழிமுறைகளை வலுப்படுத்துதல், கூட்டு முயற்சிகளை விரிவுபடுத்துதல் மற்றும் என்.ஆர்.எல்.எம்-க்குள் மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும் பாலின பிரதான நீரோட்டத்திற்கான வலுவான உத்தியை உருவாக்குதல், இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற பெண்கள் நிறைவான மற்றும் வன்முறை இல்லாத வாழ்க்கையை வாழ அதிகாரம் பெறுவதை உறுதி செய்வதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டுடன் மாநாடு முடிவடைந்தது.
---
PKV/KV
(Release ID: 2059020)
Visitor Counter : 35