விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியை வெளியிட்டுள்ளது

Posted On: 21 SEP 2024 10:55AM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற அரசு ஆதார நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியின் 2023-24-ம் ஆண்டின் மூன்றாவது முன்கூட்டிய  மதிப்பீடுகளை  வெளியிட்டுள்ளது.

மொத்த தோட்டக்கலை பயிர்கள்  2022-23, 2023-24 (2-வது முன்கூட்டிய மதிப்பீடு)     2023-24 (3rd Adv. Est.)

பரப்பளவு  (மில்லியன் ஹெக்டேர்)            28.44   28.63   28.98

உற்பத்தி ( மில்லியன் டன்)     355.48 352.23 353.19

2023-24-ம் ஆண்டில் (மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்) நாட்டில் தோட்டக்கலை உற்பத்தி சுமார் 353.19 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, 2022-23-ல் (இறுதி மதிப்பீடுகள்) சுமார் 22.94 லட்சம் டன்கள் (0.65%) குறைந்துள்ளது.

பழங்கள், தேன், பூக்கள், தோட்டப் பயிர்கள், வாசனைப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் ஆகியவற்றின் உற்பத்தி 2023-24-ல் அதிகரித்தது .

மாம்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, திராட்சை, சீதாப்பழம் மற்றும் பிற பழங்களின் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, 2023-24-ம் ஆண்டில் பழங்களின் உற்பத்தி 2022-23-ம் ஆண்டை விட 2.29% அதிகரித்து 112.73 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஆப்பிள், இனிப்பு ஆரஞ்சு, மாண்டரின், கொய்யா, லிச்சி, மாதுளை, அன்னாசி ஆகியவற்றின் உற்பத்தி 2022-23 உடன் ஒப்பிடும்போது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காய்கறிகள் உற்பத்தி சுமார் 205.80 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், மரவள்ளிக்கிழங்கு, சுரைக்காய், பூசணி, கேரட், வெள்ளரிக்காய், பாகற்காய், பர்வால் மற்றும் ஓக்ரா ஆகியவற்றின் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம், உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்தரிக்காய், பூசணிகுடைமிளகாய் மற்றும் பிற காய்கறிகள் போன்றவற்றின் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023-24ல் வெங்காயத்தின் உற்பத்தி 242.44 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

2023-24-ல் நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி சுமார் 570.49 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுமுக்கியமாக பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் உற்பத்தி குறைந்ததால் இந்த நிலை எனக் கூறப்படுகிறது.

2023-24ல் தக்காளி உற்பத்தி 213.20 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 204.25 லட்சம் டன்னாக இருந்தது. இது 4.38 சதவீதம் அதிகரிப்பாகும்.

--- 

PKV/KV


(Release ID: 2059016) Visitor Counter : 36