விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட ஆய்வுக் கூட்டம்

Posted On: 26 SEP 2024 11:38AM by PIB Chennai

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் உறுப்பினர்களுடன் 2023-2027 நாட்டின் உத்திபூர்வத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கான நாட்டின் திட்ட ஆலோசனைக் குழுவின்) கூட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி தலைமை தாங்கினார்.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் தேசிய முன்னுரிமைகளை நிவர்த்தி செய்வதற்காக, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான தேசிய உணவு அடிப்படையிலான சமூக பாதுகாப்பு அமைப்புகள்; மாறுபட்ட, சத்தான மற்றும் வலுவூட்டப்பட்ட உணவுகளின் நுகர்வு அதிகரித்தல்; பெண்களின் சமூக மற்றும் நிதி இயக்கத்தை மேம்படுத்துதல்; பருவ நிலை-நெகிழ்திறன் வாழ்வாதாரங்கள் மற்றும் உணவு அமைப்புகளை உருவாக்குவதற்கான தகவமைப்பு திறனை வலுப்படுத்துதல் ஆகிய நான்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  தேசிய உத்திபூர்வத் திட்டத்தின் கீழ் முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கவும் ஆய்வு செய்யவும், டாக்டர் தேவேஷ் சதுர்வேதி தலைமையில் நாட்டுத் திட்ட ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நித்தி ஆயோக்கின் இணைச் செயலாளர்கள் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது. தற்போதைய முன்னேற்றம் மற்றும் சாதனைகளை மதிப்பாய்வு செய்து விவாதிக்க நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

உலக உணவுத்திட்டத்தின் நாட்டு இயக்குநர் திருமதி எலிசபெத் ஃபாரே சிஎஸ்பியின் பல்வேறு இலக்கு விளைவுகளின் நிலை குறித்து குழுவுக்குத் தெரிவித்தார். அசாம், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் விவசாயத்தை மாற்றியமைத்தல் மற்றும் சிறு விவசாயிகளுக்கு உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறுதானியங்களை பிரதான நீரோட்டத்தில் இணைக்க நாடு தழுவிய முயற்சிகள்; 'பாதுகாப்பான மீன்பிடி' செயலி மூலம் மீனவ சமூகங்களில் முன்னேற்றத்தை உருவாக்குதல்; பொது விநியோக முறையை மேம்படுத்துவதற்கான முன்முயற்சி; அன்னபூர்த்தி முன்முயற்சி தானிய ஏடிஎம்களை வழங்குகிறது; பள்ளி ஊட்டச்சத்து தோட்டங்கள்; அரிசி செறிவூட்டல் முதலியன இதில் அடங்கும்.

 

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைவதற்கான பகிரப்பட்ட இலக்கால் இயக்கப்படும் துறையும் உலக உணவுத் திட்டமும் நீண்டகாலக் கூட்டாண்மையை பராமரித்து வருவதாக டாக்டர் தேவேஷ் சதுர்வேதி எடுத்துரைத்தார். அளவிடக்கூடிய தலையீடுகள் மற்றும் முன்முயற்சிகளை அடையாளம் காணுமாறும், தற்போது நடைபெற்று வரும் அமைச்சகங்கள் / துறைகளில் அவற்றை சேர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்தார். மேலும், வேளாண் துறையில் பிரத்யேகமாக மேற்கொள்ளப்படும் முக்கிய முன்முயற்சிகள் மற்றும் முன்னோடிகளை துறை அதிகாரிகளுடன் முன்வைத்து விவாதிக்க ஒரு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்யுமாறு அவர் உலக உணவுத் திட்டத்துக்கு அறிவுறுத்தினார். திட்டங்களின் ஊட்டச்சத்து விளைவுகளை அணுகும் அதே வேளையில், இந்திய மக்களுக்கு பொருந்தக்கூடிய ஊட்டச்சத்து குறித்த தரங்களையும் நாம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பல்வேறு தானியங்களின் தற்போதைய செறிவூட்டப்பட்ட வகைகளுடன், தற்போதுள்ள உள்ளூர் சிவப்பு மற்றும் கருப்பு அரிசி மற்றும் தினை வகைகளும் பிரபலப்படுத்தப்பட வேண்டும், அவை சத்தானவையாகும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) பல்வேறு முயற்சிகளில் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் அவர் ஆலோசனை கூறினார்.

இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல், வனவியல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு, வெளிவிவகாரத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை மற்றும் புவி அறிவியல் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

***

PKV/RS/KV


(Release ID: 2058958) Visitor Counter : 46