சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தின் கீழ் 80 கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கு எட்டப்பட்டுள்ளது
Posted On:
25 SEP 2024 4:14PM by PIB Chennai
'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' இயக்கத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் முக்கிய இலக்கை எட்டியுள்ளது. 2024 செப்டம்பருக்குள் 80 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கு இன்று எட்டப்பட்டுள்ளது. அரசு முகமைகள், கிராம அளவிலான நிறுவனங்கள், உள்ளூர் மக்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது.
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்பது உலக சுற்றுச்சூழல் தினமான 2024, ஜூன் 5 அன்று தொடங்கப்பட்ட நாடு தழுவிய ஒரு சிறப்பு இயக்கமாகும். இந்த இயக்கத்தின் கீழ், மக்கள் தங்கள் தாயின் மீதான அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக ஒரு மரக்கன்றினை நடுவதற்கும், மரங்களையும் தாய் பூமியையும் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஏற்பதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த இயக்கம் நிலச் சீரழிவை நிறுத்துவதையும், சீரழிந்த நிலப் பகுதிகளின் சுற்றுச்சூழலை மீட்பதையும் நோக்கமாகக் கொண்டது.
***
SMB/RS/DL
(Release ID: 2058696)
Visitor Counter : 36