நிதி அமைச்சகம்
நேரடி வரிகள், கலால், சேவை வரி தொடர்பான மேல்முறையீடுகளுக்கான தொகை வரம்பு அதிகரிப்பு
Posted On:
24 SEP 2024 6:09PM by PIB Chennai
மேல்முறையீடு செய்வதற்கான திருத்தப்பட்ட தொகை வரம்பைக் கருத்தில் கொண்டு, ரூ.5 கோடிக்கும் குறைவாக உள்ள 573 நேரடி வரி வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று முடித்துவைத்தது.
மத்திய பட்ஜெட் 2024-25 நேரடி வரிகள், கலால் மற்றும் சேவை வரி தொடர்பான மேல்முறையீடுகளை வரி தீர்ப்பாயங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான தொகை வரம்பை உயர்த்தியது. வரம்புகள் முறையே ரூ.60 லட்சம், ரூ.2 கோடி மற்றும் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டன.
2024-25 பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சிபிஐசிஆகியவை அந்தந்த களங்களில் மேல்முறையீடு செய்வதற்கான தொகை வரம்பை அதிகரிக்கத் தேவையான உத்தரவுகளை வெளியிட்டன. இதனால், பல்வேறு மேல்முறையீட்டு மன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைந்து, வரி தொடர்பான வழக்குகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடி வரி
மத்திய பட்ஜெட் 2024-25-ன் அறிவிப்புகளின்படி, வரி சச்சரவு மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதற்கான தொகை வரம்புகள் பின்வருமாறு உயர்த்தப்பட்டன:
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு: ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களுக்கு: ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்வு.
உச்ச நீதிமன்றம்: ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்வு.
இந்த திருத்தப்பட்ட வரம்புகளின் விளைவாக, பல்வேறு நீதி மன்றங்களிலிருந்து சுமார் 4,300 வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
உயர் நீதிமன்றங்கள்: 2,800 வழக்குகள்
உச்ச நீதிமன்றம்: 800 வழக்குகள்
மறைமுக வரிகள்
அதேபோல், குறிப்பிட்டபாரம்பரிய மத்திய கலால் மற்றும் சேவை வரி வழக்குகளில்மேல்முறையீடு செய்வதற்கான தொகை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது:
சுங்க கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், இந்த வரம்பு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டது
உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, இந்த வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, இந்த வரம்பு ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது.
இந்த திருத்தப்பட்ட வரம்புகளின் விளைவாக, குறிப்பிட்ட பாரம்பரிய மத்திய கலால் மற்றும் சேவை வரி வழக்குகள் தொடர்பான சுமார் 1,050 வழக்குகள் பல்வேறு நீதி மன்றங்களிலிருந்து திரும்பப் பெறப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது:
****
IR/KPG/DL
(Release ID: 2058367)
Visitor Counter : 84