பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜெய்ப்பூரில் உள்ள சைனிக் பள்ளியை முறைப்படி திறந்து வைத்தார்

Posted On: 23 SEP 2024 3:08PM by PIB Chennai

நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகளை கூட்டாண்மை முறையில் நிறுவுவதற்கான அரசின் கொள்கைக்கு ஏற்ப, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024 செப்டம்பர் 23, அன்று ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள சைனிக் பள்ளியை முறைப்படி திறந்து வைத்தார். 100 பள்ளிகளில், 45 பள்ளிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகளுடன் ஒத்துழைப்புடன் நாற்பது (40) பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன, அவற்றில் ஜெய்ப்பூர் சைனிக் பள்ளியும் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், மாநிலத்தின் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இந்த பள்ளி ஒரு சிறப்பிடமாக இருக்கும் என்றும், அவர்களுக்கு ஆயுதப் படையில் சேரவும், தேசத்திற்குச் சேவை செய்யவும் அவர்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டுதல் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகள் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் மகாராணா பிரதாப், பிருத்விராஜ் சவுகான், மகாராஜ் சூரஜ்மல் மற்றும் சவாய் ஜெய் சிங் போன்ற துணிச்சலான மனிதர்களின் மண் என்று கூறினார். இந்த மாவீரர்கள் இளைய தலைமுறையினருக்கு ராணுவத்தில் சேர ஒரு உத்வேகம் அளிப்பவர்களாக உள்ளனர். இந்த புதிய சைனிக் பள்ளி அவர்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்ய வழிகாட்டும், என்று தெரிவித்தார்.

திரு ராஜ்நாத் சிங், பிபிபி-மாதிரி பொதுவாக 'பொது-தனியார்-கூட்டாண்மை' என்று கருதப்படுகிறது, ஆனால், ஒத்துழைப்பு இப்போது அதன் நிலையான வரையறையிலிருந்து விலகி, தற்போது 'தனியார்-பொது-கூட்டாண்மை' என்று கருதப்படுகிறது. தனியார் துறை இப்போது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. வேளாண், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இந்த புதிய சைனிக் பள்ளிகள் மூலம், தனியார் மற்றும் பொதுத் துறைகள் ஒன்றிணைந்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கல்வியை வழங்கும், என்று அவர் மேலும் கூறினார்.

***

(Release ID: 2057832)

IR/AG/KR



(Release ID: 2057899) Visitor Counter : 21