சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதார ஆராய்ச்சித் துறையின் 100 நாள் முன்முயற்சிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் திரு ஜேபி நட்டா
Posted On:
23 SEP 2024 1:16PM by PIB Chennai
2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் (டி.எச்.ஆர்) 100 நாள் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு நட்டா கூறியுள்ளார். "இந்த முயற்சிகள் சுகாதார கண்டுபிடிப்புகள், தொற்றுநோய் தயார்நிலை உள்நாட்டு மருத்துவ தீர்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது ஆரோக்கியமான, தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த 100 நாட்களில் சுகாதார ஆராய்ச்சித் துறையால் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய சாதனைகள் மற்றும் முன்முயற்சிகள் பின்வருமாறு:
மெட்-டெக் மித்ரா: இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். 250 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் தொழில்துறையினர் இந்த தளத்தின் மூலம் பணியில் ஈடுபட்டுள்ளனர்,
தொற்றுநோய் தயார்நிலைக்கான தேசிய ஒரே சுகாதார இயக்கம்: இது மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் சந்திப்பில் நோய்களைக் கையாள்வதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையாகும். விலங்கு சார்ந்த நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை நிர்வகிப்பதற்கான இந்தியாவின் திறனை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியாக இந்த இயக்கம் உள்ளது.
ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் (IRDLs): நாடு முழுவதும் உள்ள நச்சுயிரி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களை நிதியுதவி மூலம் வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிய நோய்களுக்கான உள்நாட்டு மருந்துகளை உருவாக்கும் திட்டம்: மலிவு விலையில் சுகாதாரப் பராமரிப்பில் உலகளாவிய தலைமைத்துவ நாடாக மாறுவதற்கான இந்தியாவின் உந்துதலின் ஒரு பகுதியாக, 8 அரிய நோய்களுக்கான 12 உள்நாட்டு மருந்துகளை உருவாக்கும் திட்டத்தை டிஎச்ஆர் தொடங்க உள்ளது.
ஆதாரம் சார்ந்த வழிகாட்டுதல்களுக்கான மையம்: வழிகாட்டுதல்களுக்கான ஆதார மையம், திறப்புக்கு தயாராக உள்ளது, இது நாடு முழுவதும் மருத்துவ நடைமுறைகளை தரப்படுத்தும்.
ஆராய்ச்சி திறன் மேம்பாடு: மருத்துவ ஆராய்ச்சி பீடத்தின் (எஃப்.எம்.ஆர்) முதல் தொகுதியில் பல்வேறு ஐ.சி.எம்.ஆர் நிறுவனங்களில் மருத்துவ ஆராய்ச்சியில் பி.எச்.டி.க்கு இதுவரை மொத்தம் 93 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், 63 இளம் மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு முனைவர் பட்ட உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் மருத்துவ விஞ்ஞானிகள் தளத்தை வலுப்படுத்துவதில் இது ஒரு பெரிய படியாகும்.
இந்த முயற்சிகள் 2024 அக்டோபரில் தொடங்கப்பட உள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை இந்த முயற்சிகளும், சமீபத்திய சாதனைகளும் நிரூபிக்கின்றன என்று டி.எச்.ஆர் செயலாளரும், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாஹல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057779
***
PLM/RS/KR
(Release ID: 2057828)
Visitor Counter : 79