சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சர்வதேச கடலோர தூய்மை தினத்தை குறிக்கும் வகையில் மும்பையில் நாளை நடைபெறும் கடற்கரை தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்கிறார்
Posted On:
20 SEP 2024 7:07PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை (21.09.2024) மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் கடற்கரை தூய்மை இயக்கத்தில் பங்கேற்கிறார். இந்த பிரச்சாரம் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் மாநில அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடற்கரைகளில் கடற்கரைகளை தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படும்.
2018 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி "பிளாஸ்டிக்கை ஒழிப்போம்" என்ற மையக்கருத்துடன் #IamSavingMyBeach என்ற இயக்கத்தை அமைச்சகம் தொடங்கியது. 2018 முதல், அமைச்சகம் அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து கடற்கரை தூய்மைப் பணிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.
சர்வதேச கடலோர தூய்மை தினம் (ICCD) ஆண்டுதோறும் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் கடற்கரைகளை சுத்தம் செய்ய மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் பெருங்கடல்கள் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்த தினத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057146
-------------
PLM/RS/KV
(Release ID: 2057163)
Visitor Counter : 47