தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா நடத்த உள்ளது

Posted On: 20 SEP 2024 5:08PM by PIB Chennai

இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை மேம்படுத்தவும், உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES), அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு கட்டிடக்கலை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'வேவ்ஸ்' அமைப்பை ஊக்குவிப்பதற்கான விளம்பர நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஒட்டுமொத்த அம்சங்களையும் உள்ளடக்கிய, முதலாவது உலகளாவிய உச்சி மாநாடு வேவ்ஸ் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா அரசின் தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சிறப்பு தலைமைச் செயலாளர் திரு ஜெயேஷ் ரஞ்சன், இந்தத் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக, மாநிலம் ஒரு நிர்வகிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது என்றும், அதை தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
ஹைதராபாத்தில் வேவ்ஸ் உச்சிமாநாடு குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு விளக்கம்
வேவ்ஸ், மின் உற்பத்தி மற்றும் மின்னணு தொழில் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே நெருக்கமான ஒருங்கிணைந்த முயற்சிகளை காணும் என்று திரு ஜாஜு கூறினார். வளர்ந்து வரும் M&E தொழில்துறை நிலப்பரப்பில், உரையாடல், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் புதுமை ஆகியவற்றை வளர்ப்பதை WAVES ஒரு முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது. வாய்ப்புகளை ஆராயவும், சவால்களை சமாளிக்கவும், இந்தியாவுக்கு வர்த்தகத்தை ஈர்க்கவும், துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கவும், தொழில்துறை தலைவர்கள், பங்குதாரர்கள் மற்றும் புதுமையாளர்களை இந்த உச்சி மாநாடு ஒருங்கிணைக்கும்.
முன்னதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு திரைப்பட சங்கங்கள் மற்றும் ஏவிஜிசி துறையில் உள்ள தொழில்துறை தலைவர்களை சந்தித்தார். ஹைதராபாத்தில் உள்ள சிபிஎஃப்சி பிராந்திய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், திரைப்படத் துறை எதிர்கொள்ளும் பைரசிக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை கண்டிப்பாக அமல்படுத்துவதாக அவர் உறுதியளித்தார். கேமிங் தொழில் பங்குதாரர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்றும் திரு ஜாஜு உறுதியளித்தார்.

************ 


MM/AG/KV


(Release ID: 2057152) Visitor Counter : 55