ஜவுளித்துறை அமைச்சகம்
தூய்மையே சேவை 2024-ன் கீழ் தூய்மை இயக்கம் மற்றும் நீடித்த முயற்சிகளை ஜவுளி அமைச்சகம் தொடங்கியுள்ளது
Posted On:
20 SEP 2024 1:34PM by PIB Chennai
ஜவுளி அமைச்சகம் மற்றும் அதன் அமைப்புகள், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் இயக்கத்திற்கு நேற்று முதல் ஆயத்தமாகியுள்ளன. அலுவலக வளாகம், அருகிலுள்ள இடங்களில் தூய்மை இயக்கம், குப்பைகளை தரம் பிரித்தல், இருண்ட இடங்களை அடையாளம் காணுதல், பதிவு அறைகளை சுத்தம் செய்தல் மற்றும் அலுவலக வளாகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்த முயற்சியில் அடங்கும்.
"கழிவிலிருந்து செல்வம்" என்ற பொருளின் கீழ், புத்தாக்க யோசனைகள் மற்றும் செயற்பாடுகள், 5 R-களை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டன: மறுப்பு, குறைத்தல், மீள்பயன்பாடு, மறுஉபயோகம் மற்றும் மீள்சுழற்சி மற்றும் நிலைபேறான தன்மை மீது கவனம் செலுத்துதல். "மாற்றத்தின் இழைகள்: நெசவு நிலைத்தன்மை மற்றும் அதிகாரமளித்தல்" என்ற தலைப்பின் கீழ் அமைக்கப்பட்ட ஜவுளிக் குழு, தூய்மையே சேவையின் இலக்குகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனில் மறுசுழற்சியின் தாக்கத்தை எடுத்துரைத்தது.
அபிவிருத்தி ஆணையர் (கைவினைப்பொருட்கள்) அலுவலகம், கழிவுகளை கலைப்பொருட்களாக உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த அலுவலகம் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்கள் / MTS/ஊழியர்களின் உதவியுடன் கண்ணாடி, தியா, பிளான்டர் போன்ற வடிவங்களில், கழிவிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்கியது. இந்த முயற்சிகள், கழிவுகளை மதிப்புமிக்க தயாரிப்புகளாக மாற்றியமைத்து, சமூகங்களை வலுவூட்டி, நிலையான மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான சிறந்த முயற்சி ஆக்குகின்றன.
மேலும் "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" முன்முயற்சியின் கீழ், மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கம் இந்திய பருத்தி கழகம், தேசிய ஜவுளிக் கழகம், இந்திய சணல் கழகம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெற்றது.
தூய்மை விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், தூய்மையே சேவை ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் தங்கள் செல்ஃபிக்களைப் பகிர மக்களை ஊக்குவிக்கவும், ஜவுளி அமைச்சக தலைமையகத்தில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
************
MM/AG/KV
(Release ID: 2057082)
Visitor Counter : 44