கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய அரசின் முதல் 100 நாட்கள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்துவதற்கான வலுவான இடைவிடாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது

Posted On: 17 SEP 2024 6:06PM by PIB Chennai

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் அரசின் முதல் 100 நாட்களில் முக்கிய சாதனைகள் மற்றும் முன்முயற்சிகள் பின்வருமாறு:

46வது உலக பாரம்பரியக் குழு அமர்வின் வெற்றிகரமான ஏற்பாடு கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், உலக பாரம்பரியக் குழுவின் 46-வது அமர்வை 2024  ஜூலை 21-31 வரை தில்லியில் வெற்றிகரமாக நடத்தியது. பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த அமர்வில் 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2900 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கலாச்சார சொத்துக்களை சட்டவிரோதமாக கடத்துவது குறித்த கண்காட்சி மற்றும் பாரி திட்டத்தின் தொடக்கம் ஆகியவை சிறப்பம்சங்களில் அடங்கும், இதில் 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் 300 மாணவர்கள் தேசிய தலைநகர் முழுவதும் பொது கலை அம்சத்தை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.

'மொய்டம்ஸ்: அகோம் வம்சத்தின் மண்மேடு – அடக்கஸ்தல அமைப்பு': அசாமின் மொய்டம்களை இந்தியா பெருமையுடன் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்தது. பட்டியலில் வடகிழக்கு இந்தியாவிலிருந்து முதல் கலாச்சார சொத்தை குறிக்கும் இந்த தளம், இந்தியாவின் உலக பாரம்பரிய எண்ணிக்கையை 43 சொத்துக்களாக மேம்படுத்துகிறது. இது நாட்டின் மாறுபட்ட மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

இல்லம்தோறும் தேசியக் கொடி: பிரதமரால் முன்னெடுக்கப்பட்ட இந்த இயக்கத்தில், 5 கோடிக்கும் அதிகமான குடிமக்கள் தங்கள் வீடுகளில் கொடியை ஏற்றுவதன் மூலமும், கொடி ஓட்டம் ரன் கொடிப் பேரணி போன்ற தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமும் பங்கேற்றனர். இந்த இயக்கம் தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையை கணிசமாக வலுப்படுத்தியது.

ஹுமாயூனின் கல்லறை மற்றும் சூஃபி பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் திறப்பு விழா: 2024 ஜூலை, 29 அன்று, இந்த அதிநவீன அருங்காட்சியகம் தில்லியில் திறக்கப்பட்டது, இதன் மூலம், நகரத்தின் கலாச்சார மற்றும் சுற்றுலா தலங்களுக்கு ஒரு முக்கிய கூடுதல் தலமாக மாறியது.

***

IR/KPG/KR/DL



(Release ID: 2056405) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Odia