சுற்றுலா அமைச்சகம்
பாரிஸில் நடைபெறும் சுற்றுலா வர்த்தக கண்காட்சியின் 2024-ல் இந்தியாவின் பங்கேற்பு உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Posted On:
18 SEP 2024 12:04PM by PIB Chennai
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மதிப்புமிக்க சுற்றுலா வர்த்தக கண்காட்சி ஐஎஃப்டிஎம் டாப் ரேசா 2024-ல் பங்கேற்கிறது. இது 2024 செப்டம்பர் 17 முதல் 19 வரை ஃபிரான்சின் பாரிஸில் நடைபெறும் முக்கிய சுற்றுலாக் கண்காட்சிகளில் ஒன்றாகும்.
சுற்றுலா அமைச்சகம், மேகாலயா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் மாநில சுற்றுலாத் துறைகள் மற்றும் நாட்டின் முக்கிய சுற்றுலா வர்த்தக பங்குதாரர்கள் முன்னிலையில் பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரஃப் இந்திய அரங்கை திறந்து வைத்தார்.
வியத்தகுமிக்க இந்திய அரங்கு, நமது நாட்டின் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம், நடைமுறைகள் மற்றும் நவீன பயண வாய்ப்புகளின் சிறப்பான பிரதிநிதித்துவமாகும். வியத்தகுமிக்க இந்திய அரங்கு பல்வேறு சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் இடங்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில், தனியார் சுற்றுலா செயற்பாட்டாளர்கள் தங்கள் சர்வதேச சகாக்களுடன் ஈடுபடுவதற்கான இடத்தை வழங்குகிறது. இந்திய அரங்கில் நாட்டின் வளமான யோகா பயிற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கிறது.
உள்நாட்டு சுற்றுலாவை கணிசமாக அதிகரிக்கும் இலக்குடன், முக்கிய சர்வதேச சந்தைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான, இந்தியாவின் உத்திப்பூர்வ நோக்கத்தை இந்த பங்கேற்பு சுட்டிக்காட்டுகிறது.
2023-ம் ஆண்டில், பிரான்சிலிருந்து 0.18 மில்லியன் உட்பட 9.24 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியா பெற்றது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரை பிரான்ஸ் 11 வது பெரிய ஆதார சந்தையாக உள்ளது.
இந்த நிகழ்வு பயண முகமைகள் சுற்றுலா செயற்பாட்டாளர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், பயணத் தொழில்நுட்ப வழங்குநர்கள், சுற்றுலா வாரியங்கள் மற்றும் பயண மற்றும் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த பிற தொழில் வல்லுநர்கள் போன்ற பரந்த அளவிலான பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது.
****
IR/KPG/KR/DL
(Release ID: 2056351)
Visitor Counter : 37