பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
8-வது இந்திய தண்ணீர் வாரத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பங்குதாரராக பங்கேற்கும்
Posted On:
16 SEP 2024 11:40AM by PIB Chennai
புதுதில்லி, பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம், அரங்கு எண் 12A-ல், 2024 செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெறவுள்ள 8-வது இந்திய தண்ணீர் வாரம் மற்றும் கண்காட்சியில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒரு பங்குதாரர் அமைச்சகமாக பங்கேற்கிறது. "உள்ளடக்கிய நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு" என்ற கருப்பொருள், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. கிராமப்புற இந்தியாவில் நீடித்த நீர் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. இதற்காக வளங்களை ஒருமுகப்படுத்துவதன் வாயிலாக, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதற்கான அதன் முயற்சியின் ஒரு பகுதியாக போதுமான நீர் கிராமங்களை ஊக்குவித்து வருகிறது.
அமைச்சகத்தின் கண்காட்சி அரங்கம், நீர் சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர் விநியோகம், நீர் விநியோகத்தில் பங்கீடு போன்றவற்றில் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பின்பற்றப்படும் நீர் மேலாண்மையில் சிறந்த நடைமுறைகளை காட்சிப்படுத்தும். உத்தராகண்டில் உள்ள பவுரி கார்வால் மாவட்டத்தின் கோத்தர் கிராம பஞ்சாயத்து ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், அங்கு தண்ணீரை சேகரிக்க ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது, பின்னர் அது அருகிலுள்ள கிராமங்களுக்கு ஒரு பம்ப் ஹவுஸ் மூலம் விநியோகிக்கப்படுகிறது. நீர் தன்னிறைவை உறுதி செய்வதற்கான நடைமுறை, புதுமையான தீர்வுகளை செயல்படுத்துவதற்கான கிராம பஞ்சாயத்தின் அர்ப்பணிப்பை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.
இதுதவிர, மணிப்பூரில் உள்ள கீனோ கிராம பஞ்சாயத்தின் புதுமையான அணுகுமுறை, வாட்டர் ஏடிஎம் கியோஸ்க் அமைத்து, கிராமவாசிகளுக்கு ஆர் ஓ + யுவி தண்ணீரை வழங்குவதன் மூலம், வாங்முன் (மாவட்டம் - ஜம்புய் ஹில்ஸ், திரிபுரா), சிலுவூரு (மாவட்டம் - குண்டூர், ஆந்திரா), பிர்கஞ்ச் (மாவட்டம் - கோமதி, திரிபுரா), ஹிவாரே பஜார் (மாவட்டம் - அகமதுநகர், மகாராஷ்டிரா), பஜர்வாடா (மாவட்டம் - வர்தா, மகாராஷ்டிரா), மற்றும் குர்சாபர் (மாவட்டம் - நாக்பூர், மகாராஷ்டிரா) ஆகிய தண்ணீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும்.
நீடித்த வளர்ச்சிக்கான உள்ளூர்மயமாக்கல் இலக்குகளின் (LSDGs) ஒன்பது கருப்பொருள்களில், தண்ணீர் தன்னிறைவு பெரும் பஞ்சாயத்து கருப்பொருளும் ஒன்றாகும். இது சுத்தமான நீர் அணுகலை உறுதி செய்தல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான நீர் மேலாண்மையை பின்பற்றுதல் தழுவுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ஒன்பது கருப்பொருள்களும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
கிராமப்புற இந்தியாவில், தண்ணீர் சவால்களை எதிர்கொள்வதில் கிராம பஞ்சாயத்துகளின் முக்கியப் பங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அங்கீகரிக்கிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இதர முக்கிய பங்குதாரர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த உன்னதமான, மக்கள் சார்ந்த நோக்கத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது. கிராமப்புறங்களில் நீர் மேலாண்மை ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்பதால், இந்த முயற்சிகளின் வெற்றி, பொது விழிப்புணர்வு மற்றும் கூட்டு நடவடிக்கையை பெரிதும் சார்ந்துள்ளது.
இந்த இயக்கத்தில் அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்த, 8-வது இந்திய நீர் வாரம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. எல்.எஸ்.டி.ஜி.க்களின் நீர் போதுமான பஞ்சாயத்து கருப்பொருளின் கீழ் சிறப்பாக செயல்படும் சில பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகள் 8 வது இந்திய நீர் வாரத்தில் பிரதிநிதிகளாக பங்கேற்க உள்ளனர். இந்தியா தண்ணீர் வாரம்-2024-ல் இந்தியா முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. நீர் மேலாண்மை குறித்த தேசிய விவாதங்களில் அடிமட்ட ஈடுபாட்டை உறுதி செய்வதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பல்வேறு மாநாடுகள், பயிலரங்குகள், திறன் வளர்ப்பு, பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை தலையீடுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்துகளின் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் வழக்கமான உரையாடல்கள் மூலம் நீர் தன்னிறைவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. சுதந்திர தின அமிர்த பெருவிழா (AKAM) ஐகானிக் வாரத்தின் ஒரு பகுதியாக 16 ஏப்ரல் 2022 அன்று போதுமான நீர் பஞ்சாயத்துகள் மற்றும் தூய்மையான மற்றும் பசுமை பஞ்சாயத்துகளை மையமாகக் கொண்ட LSDGகள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2022 செப்டம்பர் 22 முதல் 24 வரை மகாராஷ்டிராவின் புனேவில் அதே கருப்பொருள்களில் தேசிய கருப்பொருள் பட்டறை நடைபெற்றது. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை (24 ஏப்ரல் 2023) முன்னிட்டு, 20 ஏப்ரல் 2023 அன்று LSDGகள் குறித்த தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது, இது ஆரோக்கியமான பஞ்சாயத்துகள், போதுமான நீர் பஞ்சாயத்துகள் மற்றும் சுத்தமான, பசுமை பஞ்சாயத்துகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது
இந்த மாநாடுகள் மற்றும் பயிலரங்குகள், சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு தங்கள் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான தளங்களை உருவாக்கி, நீர் நிலைத்தன்மையை நோக்கிய நாடு தழுவிய இயக்கத்தை ஊக்குவிக்கின்றன. பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஊரகப் பகுதிகளில் நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு மற்றும் சுத்தமான குடிநீரை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில், பஞ்சாயத்துகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, இதனால் நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதற்கும் வளமான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.
சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு தேசிய பஞ்சாயத்து விருதுகள் மூலம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் 2022-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன, அவை 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளடக்கிய 9 உள்ளூர்மயமாக்கல் நிலையான வளர்ச்சி இலக்குகள் (LSDGs) கருப்பொருள்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்ற பஞ்சாயத்து என்ற கருப்பொருளின் கீழ் சிறப்பாக செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு ஊக்கமளிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதுபோன்ற சிறந்த நடைமுறைகளை பின்பற்ற, மற்றவர்களையும் ஊக்குவிக்கிறது. இந்த முன்மாதிரியான பஞ்சாயத்துகளுக்கு, அவர்களின் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், வெற்றிகரமான நீர் மேலாண்மை முயற்சிகளை தங்கள் சொந்த கிராம பஞ்சாயத்துகளில் பிரதிபலிக்க, மற்றவர்களை ஊக்குவிக்கவும் தேசிய மேடைகள் வழங்கப்படுகின்றன. ஊராட்சி வளர்ச்சிக் குறியீடு வாயிலாக முன்னேற்றத்தைக் கண்காணித்து, பொறுப்புணர்வு மற்றும் தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துகிறது.
8-வது இந்திய தண்ணீர் வாரத்தின்போது, தண்ணீர் துறையில் சிறந்த நடைமுறைகள் குறித்த கருப்பொருள் அமர்வு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் வெற்றிகரமான முன்முயற்சிகளை வலியுறுத்தும். இந்த அமர்வு, மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதையும், நாடு முழுவதும் தண்ணீர் சவால்களை எதிர்கொள்ள பிரதிபலிக்கக்கூடிய மாதிரிகளை முன்னிலைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
(Release ID: 2055303)
MM/AG/KR
(Release ID: 2055321)
Visitor Counter : 69