நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வெங்காயத்தை மானிய விலையில் விற்கும் மத்திய அரசின் முயற்சி விலை வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது
சென்னையில் 19 இடங்களில் விற்பனை
Posted On:
14 SEP 2024 12:41PM by PIB Chennai
வெங்காயத்தின் சில்லரை விற்பனையை கிலோவுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய 5 செப்டம்பர் 2024 அன்று மொபைல் வேன்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், தேசிய கூட்டுறவு நிதியம் மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் நடமாடும் ஊர்திகள் மூலமாக தில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நுகர்வு மையங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் சென்னை, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர், குவஹாத்தி போன்ற முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த முயற்சி நேர்மறையான உறுதியான முடிவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. 5 மற்றும் 13 ஆகிய தேதிஉகளுக்கு இடையே, தில்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வெங்காய விலை குறைந்துள்ளது.
அதிகரித்து வரும் வெங்காய தேவைக்கு ஏற்பவும், விலையை மேலும் குறைக்கவும், வெங்காயத்தின் அளவு மற்றும் விநியோகத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. இ-காமர்ஸ் தளங்கள், கேந்திரிய பந்தர் மற்றும் சஃபால் விற்பனை நிலையங்களுக்கு சில்லறை விற்பனையை விரிவுபடுத்துவதைத் தவிர, நுகர்வோருக்கு மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மொத்த விற்பனை உத்திகளும் பின்பற்றப்படுகின்றன. தில்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஏற்கனவே மொத்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது, மேலும் வரும் நாட்களில் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிற்கும் விரிவுபடுத்தப்படும், இறுதியில் அனைத்து மாநில தலைநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த முறை, சாலை போக்குவரத்து மற்றும் ரயில் நெட்வொர்க் மூலம் மொத்த விற்பனை நடக்கிறது. இந்த முயற்சி, தளவாட செயல்திறனைக் கொண்டுவருவதைத் தவிர, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் குறைக்கும்.
வளர்ந்து வரும் வழங்கல்-தேவை நிலைமைகள் மற்றும் விலை போக்குகளின் அடிப்படையில் இலக்கு மற்றும் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக நுகர்வோர் விவகாரங்கள் துறை மாநில அரசுகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மலிவு விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் இறுதி குறிக்கோள். எனவே, வெங்காய விலையை விழிப்புடன் மேற்பார்வையிடுவதற்கும், நுகர்வோரை மேலும் விலை அதிகரிப்பிலிருந்து பாதுகாக்க அதிக விலை மையங்களில் வெங்காயத்தை அகற்றுவதற்கான செயலூக்கமான முடிவுகளை தொடர்ந்து எடுப்பதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது.
மேம்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை உத்திகள், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரித்த காரீப் விதைப்பு பகுதி ஆகியவற்றுடன், வெங்காய விலை வரும் மாதங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சென்னையில் மயிலாப்பூர் லஸ் கார்னர் ,தேனாம்பேட்டை, போரூர், தாம்பரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஆலந்தூர் மெட்ரோ, தி.நகர், மெப்ஸ் சிக்னல், ஆழ்வார்பேட்டை, கிண்டி வட்டம், கீழ்ப்பாக்கம் மெட்ரோ, சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணா நகர், கோயம்பேடு பேருந்து நிலையம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கொளத்தூர் ஆகிய இடங்களில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது..
*****
PKV / KV
(Release ID: 2054925)
Visitor Counter : 51