சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0-ன் போது தூய்மை, நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்த சுற்றுலா அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது

Posted On: 13 SEP 2024 4:35PM by PIB Chennai

தூய்மையையும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவேற்றுவதையும்  மையமாகக் கொண்டு 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை சிறப்புத் தூய்மை இயக்கம் 4.0-வை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலா அமைச்சகம், அதன் துணை அலுவலகங்கள், உள்நாட்டு சுற்றுலா அலுவலகங்கள், ஹோட்டல் மேலாண்மை -கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான தேசிய கவுன்சில், மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், இந்திய சமையல் நிறுவனங்கள், இளைஞர் சுற்றுலா சங்கங்கள் போன்றவை இதில் பங்கேற்கின்றன.

சிறப்பு இயக்கம் 3.0-ன் போது, சுற்றுலா அமைச்சகம் நாடு முழுவதும் 412 தூய்மை இயக்கங்களை நடத்தியது. மொத்தம் ௩௪௯௬ உடல் கோப்புகள் களையெடுக்கப்பட்டன மற்றும் 1633 மின்னணு கோப்புகள் மீது. நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு முகாம்கள் 3.0-ன் கீழ் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் விரிவாக தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், 02 அக்டோபர் 2024 முதல் 31 அக்டோபர் 2024 வரை நடைபெறவுள்ள சிறப்பு தூய்மை இயக்கம் 4.0-ன் இலக்குகள் வெற்றிகரமாக அடையப்படுவதை உறுதி செய்ய சுற்றுலா அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

***

PLM/RS/DL


(Release ID: 2054643) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi , Kannada