பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தூய்மை இந்தியா சிறப்பு இயக்கம் 4.0 இன் போது நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைக்க உறுதி பூண்டுள்ளது
Posted On:
12 SEP 2024 7:24PM by PIB Chennai
தூய்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் நிலுவையில் உள்ள பணிகளை குறைப்பதை மையமாகக் கொண்டு 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை தூய்மை இந்தியா சிறப்பு இயக்கம் 4.0 ஐ இந்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மூன்றாவது கட்ட சிறப்பு இயக்கத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாதாந்திர அடிப்படையில் நிலுவையில் உள்ள கோப்புகளை அகற்ற நிலையான முயற்சிகளை மேற்கொண்டது.
சிறப்பு இயக்கம் 3.0-ன் போது, அமைச்சகம் 5049 பொதுமக்கள் குறைகள் மற்றும் 1199 பொதுமக்கள் குறைகள் மேல்முறையீடுகளைத் தீர்த்து வைத்துள்ளது.
காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்க, அமைச்சகம் மின்னணு கோப்புகளைப் பயன்படுத்துகிறது மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு இயக்கத்தின் போது பதிவு மேலாண்மை நடைமுறைகளின் ஒரு பகுதியாக 339 மின்னணு கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
எதிர்வரும் நான்காவது கட்ட சிறப்பு இயக்கத்தின்போது தனது முயற்சிகளை மேம்படுத்துவதில் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
BR/KR
***
(Release ID: 2054411)
Visitor Counter : 92