ஜல்சக்தி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தலைமையில் கங்கை புனரமைப்புக்கான அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவின் 12-வது கூட்டம்
Posted On:
11 SEP 2024 5:28PM by PIB Chennai
கங்கை புத்துயிரூட்டலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட பணிக்குழுவின் 12-வது கூட்டம், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தலைமையில், இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷண் சவுத்ரி முன்னிலையில் நடைபெற்றது. குடிநீர் மற்றும் துப்புரவு துறை சிறப்புப் பணி அதிகாரி அசோக் கே.மீனா, மூத்த அதிகாரிகள், ராகேஷ் குமார் வர்மா, ராஜீவ் குமார் மிட்டல், நிர்வாக இயக்குநர்கள் மற்றும் மின்சார அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், வீட்டுவசதி-நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசின் முதன்மைச் செயலாளர் திரு அனுராக் ஸ்ரீவத்சவா, பீகார் மாநில அரசின் கூடுதல் செயலாளர் திரு சுனில் குமார் யாதவ், உத்தராகண்ட் மாநில அரசின் செயலாளர் திரு ஷைலேஷ் பகூலி, ஜார்க்கண்ட் மாநில அரசின் முதன்மைச் செயலாளர் திரு சுனில் குமார், மேற்கு வங்க மாநில அரசின் முதன்மைச் செயலாளர் திருமதி நந்தினி கோஷ், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேசிய தூய்மை இந்தியா இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் குமார் மிட்டல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான விளக்கக் காட்சியை வழங்கினார். கடந்த கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சருக்கு விளக்கினார்.
இந்த அமர்வின் போது, கங்கை நதியை புனரமைப்பதற்கான விரிவான செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. திட்டத்தின் கீழ் கங்கை புனரமைப்பு பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுபயன்பாடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு, மாசுபட்ட நதி நீட்சிகளை சரிசெய்தல், நதி செயல் திட்டத்தை செயல்படுத்துதல், இயற்கை விவசாயம் ஆகியவை முக்கிய தலைப்புகளில் அடங்கும். கங்கை தொடர்பான திட்டங்களின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்த அமைச்சர், அர்ப்பணிப்பு, பாதுகாப்பு முயற்சிகள் மூலம் புனித நதியின் புனிதத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஊரக மற்றும் நகர்ப்புற துப்புரவு முயற்சிகள், நதிகளை தூய்மைப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான இலக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து விளக்கம்: 1. அனைத்து மாநில அரசுகளும் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதுடன், மாசுபட்ட பகுதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பிப்பதை விரைவுபடுத்த வேண்டும்.
2.மாநில அரசுகள் கிராமப்புற சுகாதாரத்தில் கவனம் செலுத்துதல் அனைத்து கிராமங்களும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பிளஸ் அந்தஸ்தை அறிவிப்பதை உறுதி செய்வது, தேவையான சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும்.
3.மாநில அரசுகள், கிராமங்கள் வழியாக ஆற்றில் கலக்கும் அனைத்து நுல்லாக்கள் / வடிகால்களையும் வரைபடமாக்கி NMCGக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
4.STPகளின் இயக்கம், பராமரிப்பு கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
5.அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஆன்லைன் தொடர்ச்சியான உமிழ்வு கண்காணிப்பு அமைப்புகளை (OCEMS) நிறுவுவதன் மூலமும், அதை NMCG-ல் யமுனா மற்றும் கங்கை (PRAYAG) நிகழ்நேர கண்காணிப்புக்கான தளத்துடன் இணைப்பதன் மூலமும் ஆன்லைன் கண்காணிப்புக்கான முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். நதிகளை தூய்மைப்படுத்தும் முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மாசு குறைப்பு முயற்சிகளை முடிக்க என்.எம்.சி.ஜி.க்கு உதவுமாறு ஜல் சக்தி அமைச்சர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார்:
நாட்டில் கங்கை நதிக்கு ஆன்மீக இணைப்பு இருப்பதை வலியுறுத்திய திரு. பாட்டீல், இந்தப் புனித நதிக்கரையில் உள்ள சுற்றுலா வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இது பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, உள்கட்டமைப்புக்கும் ஊக்கமளிக்கும்.
கருத்து விளக்கம்: சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை மீண்டும் பயன்படுத்துதல்1.சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஜல்சக்தி அமைச்சர், சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதை ஒரு முக்கியமான வளமாக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மறுபயன்பாடு ஊக்குவிக்கப்படுத்துவதுடன், சாத்தியமான அனைத்து விருப்பங்களையும் கவனிக்க வேண்டும்.
2. சுத்திகரிக்கப்பட்ட நீரை மறு பயன்பாட்டிற்கான தேசிய கட்டமைப்பை தேசிய தூய்மை இந்தியா இயக்கம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேசிய கட்டமைப்புக்கு ஏற்ப, அனைத்து மாநிலங்களும் தங்களது கட்டமைப்பை, மேம்படுத்த வேண்டும் / புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
3. இத்துறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை, மத்திய மின்சார அமைச்சகம் உறுதி செய்து ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கட்டுமானம் மற்றும் பிற துறைகளில் மறுபயன்பாடு குறித்தும் ஆராயப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
4.நன்னீரைப் பயன்படுத்துவதற்கான செலவைக் கருத்தில் கொண்டு, மறுபயன்பாட்டின் பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நகர்ப்புற நதி மேலாண்மைத் திட்டங்கள், நகர அளவில் நதிகளைப் புத்துயிரூட்டும் முயற்சிகளுக்கு ஒரு விரிவான அணுகுமுறையை வழங்குகின்றன என்றும், நகர்ப்புற நதிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவை பிரதான நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்றும் திரு பாட்டீல் வலியுறுத்தினார். நதி நகரக் கூட்டணி (ஆர்.சி.ஏ), நதி நகரங்களிடையே கூட்டுக் கற்றலை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதுடன், நதிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தளமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டேனிஷ் ஒத்துழைப்பு மற்றும் ஐ.ஐ.டி (பி.எச்.யு) உடன் உருவாக்கப்பட்டு வரும் தூய்மையான நதிகளுக்கான நவீன ஆய்வகம் என்ற கருத்தை அவர் பாராட்டினார். இது நாட்டில் சிறிய நதிகளுக்கு புத்துயிரூட்டும் முயற்சிகளுக்கு உதவும்.
கங்கை படுகையில் இயற்கை விவசாய முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார், ஏனெனில் இது நதிகளுக்கு புத்துயிர் அளிக்க உதவும். தேசிய தூய்மை இந்தியா திட்டத்தின் இந்த முன்முயற்சியை ஆதரிப்பதாகவும், இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல தீவிரமாக ஒத்துழைப்பதாகவும் வேளாண் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இயற்கை வேளாண்மையின் செயல்பாடுகளை மேம்படுத்த ஒரு செயல்திட்டம் தயாரிக்கப்படும்.
அமைப்புச்சார்ந்த மேம்பாட்டு முயற்சியாக, குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மற்றும் என்.எம்.சி.ஜி இணைந்து தூய்மையான கங்கை பயிலரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
நதிகளுக்கு புத்துயிரூட்டுவதில் சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டு முயற்சிகளை வலியுறுத்திய அமைச்சர், நதிகள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருமுகப்படுத்தப்பட்ட விவாதத்திற்கு ETF ஒரு தளத்தை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். கங்கை நதிக்கு புத்துயிரூட்டும் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, மாண்புமிகு பிரதமரின் இலக்குகள் மற்றும் குறிக்கோளை அடைய அனைத்து பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
***
MM/RS/DL
(Release ID: 2053880)
Visitor Counter : 37