கலாசாரத்துறை அமைச்சகம்
மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு ரயில் பெட்டி: ராஜ்காட்டில் மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் நாளை திறந்து வைக்கிறார்
Posted On:
10 SEP 2024 6:42PM by PIB Chennai
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு ரயில் பெட்டியை ராஜ்காட்டில் உள்ள காந்தி தர்ஷனில் நாளை (2024, செப்டம்பர் 11) திறந்து வைக்கிறார்.
ரயில்வே அமைச்சகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த தனித்துவமான கண்காட்சி, மகாத்மா காந்தியின் சகாப்தத்திலிருந்து துல்லியமாக மீட்டெடுக்கப்பட்ட ரயில் பெட்டியைக் கொண்டுள்ளது. இது தேசத்தை ஒன்றிணைப்பதற்கும் நீதி மற்றும் சமத்துவத்திற்காக வாதிடுவதற்கும் அவரது பணியில் கருவியாக இருந்து அவரது புகழ்பெற்ற ரயில் பயணங்களை குறிக்கிறது.
இந்தப் பயணங்கள் காந்தியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்களிப்பைக் கொண்டிருந்தன. ஒன்றுபட்ட அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற துணியை நெய்யும் அவரது பணியில் ரயில்வே ஒரு முக்கிய கருவியாக மாறியது.
காந்தி தர்ஷனில் உள்ள ரயில் பெட்டி, காந்தியின் பயணங்கள் மற்றும் சக பயணிகளுடனான அவரது கலந்துரையாடல்களை சித்தரிக்கும் சிற்பங்களாக செறிவூட்டப்பட்டுள்ளன. இது, பார்வையாளர்களுக்கு மகாத்மா காந்தியின் ரயில் பயணங்களை உயிர்ப்பிக்கும் ஈடுபாடுள்ள அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053512
***
LKS/RS/DL
(Release ID: 2053536)
Visitor Counter : 74