தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (2016=100) – ஜூலை, 2024
Posted On:
09 SEP 2024 6:05PM by PIB Chennai
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணைந்த அலுவலகமான தொழிலாளர் பணியகம், நாட்டில் உள்ள 88 தொழில் முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் உள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டைத் தொகுத்து வருகிறது. 2024 ஜூலை மாதத்திற்கான குறியீடு இந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது.
ஜூலை, 2024-க்கான அகில இந்திய தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடு 1.3 புள்ளிகள் அதிகரித்து 142.7 (நூற்று நாற்பத்தி இரண்டு புள்ளி ஏழு) ஆக இருந்தது. 2024 ஜூலை மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 2023 ஜூலையின் 7.54% உடன் ஒப்பிடுகையில் 2.15% ஆக குறைந்து காணப்பட்டது. 2024 ஜூன் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.67% ஆக இருந்தது, இது 2023 ஜூன் மாதத்தில் 5.57% ஆக இருந்தது.
இந்திய தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் (பொது) 2024 ஜூன், மற்றும் 2024 ஜூலை மாதத்துக்கான அகில இந்திய குழு வாரியான நுகர்வோர் விலைக் குறியீடு:
வரிசை எண்
|
குழுக்கள்
|
2024ஜூன்
|
2024 ஜூலை
|
I
|
உணவு மற்றும் பானங்கள்
|
148.7
|
150.4
|
II
|
பான், சுபாரி, புகையிலைப் பொருட்கள்
|
161.6
|
162.0
|
III
|
ஆடை & காலணிகள்
|
144.2
|
144.4
|
IV
|
வீட்டுவசதி
|
128.4
|
131.6
|
V
|
எரிபொருள் & மின்சாரம்
|
148.8
|
148.8
|
VI
|
இதரப் பொருட்கள்
|
136.3
|
136.6
|
|
பொதுக் குறியீடு
|
141.4
|
142.7
|
*****
(Release ID: 2053181)
PKV/KPG/RR
(Release ID: 2053395)
Visitor Counter : 70