பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மாலத்தீவின் அரசு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முசோரியில் இன்று தொடங்கியது

Posted On: 09 SEP 2024 4:04PM by PIB Chennai

நல்லாட்சிக்கான தேசிய மையம், மாலத்தீவு அரசின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான 33-வது திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முசோரியில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 20-ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த இரண்டு வார பயிற்சித் திட்டம், வெளியுறவு அமைச்சகத்துடன்  இணைந்து நடத்தப்படுகிறது. 1,000 மாலத்தீவு அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்ததைத் தொடர்ந்து மாலத்தீவின் அரசு அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் இது முதல் பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

 

2024 ஆம் ஆண்டு 2029 வரையிலான காலகட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் திரு மூசா ஜமீர் ஆகியோர் கையெழுத்திட்டனர். மாலத்தீவின் முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உதவி இயக்குநர்கள், மூத்த நிர்வாகிகள், கவுன்சில் அதிகாரிகள், பீடங்கள் மற்றும் சமூக சுகாதார அதிகாரிகள் உட்பட மாலத்தீவைச் சேர்ந்த 34 அரசு அதிகாரிகளுக்கு தற்போதைய திட்டம் பலனளிக்கும்.

 

தொடக்க அமர்வுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநரும், இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு. வி. ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். தமது உரையில், பங்கேற்பாளர்களை வரவேற்ற அவர், முதல் கட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் (2019-2024) சாதனைகளைப் பிரதிபலித்தார். அப்போது 1,000-க்கும் மேற்பட்ட மாலத்தீவு அரசு அதிகாரிகள் நல்லாட்சிக்கான தேசிய மையத்தை பார்வையிட்டனர்.

 

முதல் கட்டத்தில் நிரந்தர செயலாளர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் சிவில் சேவை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய துறைகள் மற்றும் அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் போன்ற முக்கிய நபர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் எவ்வாறு இருந்தனர் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

 

இந்தியாவின் ஆளுகை மாதிரி, அது "அமிர்த காலம்" அல்லது "தொலைநோக்கு 2047" க்குள் நுழையும்போது நோக்கம், அளவு ஆகியவற்றில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மற்றும் சிறந்த கொள்கை வகுப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

 

சேவை வழங்குதல், நிறுவனங்களை மாற்றியமைத்தல் மற்றும் மக்களை அரசுக்கு நெருக்கமாக கொண்டு வருதல். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவருவதற்கும், நிறுவனங்களை மாற்றுவதற்கும், நல்ல நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது எவ்வாறு அவசியம் என்பது குறித்து அவர் விளக்கினார்.

 

 பொதுமக்கள் குறை தீர்க்கும் அமைப்பு, ஓய்வூதியங்கள் நலன், வீட்டுவசதி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல முன்முயற்சிகள் மற்றும் நேர்மறையான போட்டியை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகள் போன்ற மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் வெற்றிகரமான மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விரிவாக விவாதித்தார். அதிகாரிகள் குழுக்களாக பணியாற்றி, மேற்கொள்ளப்படும் முக்கிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கங்களை அளிக்குமாறு அவர் ஊக்குவித்தார்.

 

மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷனின் நிதி நிர்வாகியும், மாலத்தீவு தூதுக்குழுவின் குழுத் தலைவருமான திருமதி ஃபத்மத் இனாயா, இந்த வாய்ப்புக்காக இந்திய அரசுக்கும் நல்லாட்சிக்கான தேசிய மையத்திற்கும் தமது நன்றியைத் தெரிவித்தார், மேலும் இந்த திட்டத்தில் இருந்து விரிவாகக் கற்றுக்கொள்ளவும் பயனடையவும் முடியும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

 

நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் இணைப் பேராசிரியரும், திட்டத்தின் பாடநெறி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பி.எஸ்.பிஷ்ட், நல்லாட்சிக்கான தேசிய மையம் பல ஆண்டுகளாக எட்டிய மைல்கற்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கினார். பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிசியா, செஷல்ஸ், காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூட்டான், மியான்மர், எத்தியோப்பியா, எரித்ரியா, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, மடகாஸ்கர், பிஜி, மொசாம்பிக், கம்போடியா, மடகாஸ்கர், பிஜி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் பயிற்சி அளித்துள்ளது என்று விளக்கப்பட்டது.

 

மாலத்தீவின் நிரந்தர செயலாளர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 1000 அரசு ஊழியர்களுக்கு கள நிர்வாகத்தில் மொத்தம் 32 திறன் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி அளித்ததன் மூலம் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

***

(Release ID: 2053133)

PKV/RR/KR



(Release ID: 2053143) Visitor Counter : 34