பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தான இணை உணவு மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்தல் -ஊட்டச்சத்து மாதத்தின் முக்கியமான கருப்பொருள்

Posted On: 08 SEP 2024 4:36PM by PIB Chennai

மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 7-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கடைபிடித்து வருகிறது. இது அடித்தள அளவிலான ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், நடத்தை மாற்றங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு மாத கால நிகழ்வாகும். இந்த ஆண்டு கருப்பொருள் குழந்தைகளின் ஊட்டச்சத்தின் முக்கிய அம்சமான சத்தான இணை உணவை உள்ளடக்கியதாகும்.

ஊட்டச்சத்து மாதத்தின் 7 வது நாள் வரை, அது தொடர்பாக 1.79 கோடி நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இது குழந்தைகள், சிறு குழந்தைகளிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான பரவலான உற்சாகத்தையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்தின் முக்கிய அம்சமான இணை உணவூட்டுதலில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன.

குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இணை உணவுகள் அவசியம். ஒரு குழந்தை தாய்ப்பால் தவிர மற்ற உணவுகளுக்கும் தயாராகும். இணை உணவின் தொடக்க நேரம், ஊட்டச்சத்தின் தரம், இணை உணவின் அளவு, எத்தனை முறை இணை உணவு வழங்குவது, அதன் அளவு போன்றவை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 756 மாவட்டங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு இயக்கங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

***

PLM/DL


(Release ID: 2053000) Visitor Counter : 57