பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளின் 22 குடிமைப் பணியாளர்களுக்கு புதுதில்லியில் தலைமைத்துவ மேம்பாட்டுப் பயிற்சி

Posted On: 06 SEP 2024 11:12AM by PIB Chennai

லத்தீன் அமெரிக்க, கரீபியன் நாடுகளைச் சேர்ந்த 22 குடிமைப் பணியாளர்களுக்கு பொதுக் கொள்கை மற்றும் ஆளுகை மீதான தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை நல்லாட்சிக்கான தேசிய மையம்  இன்று புதுதில்லியில் தொடங்கியது. அர்ஜென்டினா, கோஸ்டாரிகா, எல்சால்வடார், கயானா, ஹோண்டுராஸ், ஜமைக்கா, பராகுவே, பெரு, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், சுரினாம் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு  2024 செப்டம்பர் 2 முதல் 13 வரை   இரண்டு வார கால பயிற்சித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிகளுடன் வடகிழக்கு ஆராய்ச்சி மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தின் செயலாளரும், தேசிய நல்லாட்சி மையத்தின் தலைமை இயக்குநருமான திரு வி வி ஸ்ரீனிவாஸ் கலந்துரையாடினார். லத்தீன் அமெரிக்க நாடுகள்- இந்தியா இடையேயான ஆட்சி மாதிரிகளில் உள்ள பொதுவான அம்சங்கள்  இதில் விவாதிக்கப்பட்டன. முன்னுரிமைத் துறைத் திட்டங்களின் செறிவூட்டப்பட்ட அணுகுமுறையே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரியின் வரையறுக்கப்பட்ட இலக்காகும். காலனிய மனப்பான்மையின் தடயங்களை அகற்றுதல், நமது வேர்கள் குறித்து பெருமிதம் கொள்ளுதல், ஒற்றுமை மற்றும் குடிமக்களிடையே கடமை உணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை அமிர்த கால நல்லாட்சியின் அடிப்படைக் கொள்கைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வதில் தேசம் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், திட்டங்களை கடைசி மைல் வரை  கொண்டு செல்லுதல், அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு, உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி, அதிநவீன கண்டுபிடிப்புகள், புதிய யுக தொழில்நுட்பம் ஆகியவை இந்தியாவின்  தேடலாகும் என்பது எடுத்துரைக்கப்பட்டது.

நல்லாட்சிக்கு கருவியான ஆதார் அட்டை, திறன் இந்தியாவுக்கான கொள்கை மற்றும் நடைமுறைகள், இந்தியாவின் நிதி மற்றும் நாணயக் கொள்கை, புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்வு பிரச்சினைகள், 2030-க்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான அணுகுமுறை, இந்திய கலாச்சாரம் மற்றும் நிலையான சுற்றுலா, டிஜிட்டல் பொருளாதாரம், நகர்ப்புற நிர்வாகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வேளாண்மை, முழுமையான சுகாதாரம், பேரிடர் மேலாண்மை மற்றும் மனிதாபிமான நிவாரணம், அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருதல், மின்-ஆளுமை மற்றும் டிஜிட்டல் பொது சேவை வழங்கல் போன்றவை இந்த இரண்டு வார கால பயிற்சி திட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

வன ஆராய்ச்சி நிறுவனம், உத்தரப்பிரதேசம் கவுதம் புத்தா நகர் மாவட்ட நிர்வாகம்சர்வதேச சூரியசக்தி கூட்டணி, தேசிய சூரிய எரிசக்தி நிறுவனம், இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான சர்வதேச நிறுவனம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஆகியவற்றுக்குப் பங்கேற்பாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பாடநெறி ஒருங்கிணைப்பாளரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் ஹிமான்ஷி ரஸ்தோகி, இணைப் பாடநெறி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முகேஷ் பண்டாரி, திட்ட உதவியாளர் திரு சஞ்சய் தத் பந்த், தேசிய நல்லாட்சி மைய ஆலோசகர் டாக்டர் ஜைத் ஃபகர், இளம் தொழில்முறையாளர் திருமதி மேகா தோமர் ஆகியோரால் திறன் மேம்பாட்டு குழு மேற்பார்வையிடப்படுகிறது.

***

(Release ID: 2052429)

SMB/AG/RR



(Release ID: 2052506) Visitor Counter : 19