பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி திரு தீபக் மிஸ்ரா ஆகியோர் புதுதில்லியில் பொறுப்பான வர்த்தக நடத்தை குறித்த தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தனர்
Posted On:
04 SEP 2024 7:41PM by PIB Chennai
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியும், 45-வது இந்திய தலைமை நீதிபதியுமான தீபக் மிஸ்ரா ஆகியோர் புதுதில்லியில்‘பொறுப்பான வணிக நடத்தைக்கான தேசிய மாநாடு 2024- வளர்ந்த பாரதத்துக்கான சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகையில் (இ.எஸ்.ஜி) அதிகரிப்பு’ என்ற தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டை இந்திய பெருநிறுவன விவகாரங்கள் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்விரான்மென்ட் ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு மல்ஹோத்ரா, நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான வணிக நடைமுறைகளை வளர்ப்பதில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இ.எஸ்.ஜியின் இன்றியமையாத பங்கை, குறிப்பாக வளர்ந்த பாரதத்தை அடைவதில் அனைவரையும் உள்ளடக்கியதை எடுத்துரைத்தார், மேலும் நெறிமுறை மற்றும் நிலையான நடைமுறைகளை பின்பற்றுவதில் இந்திய வணிகங்கள் முன்னுதாரணமாக வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பெருநிறுவன ஆளுகையின் நெறிமுறை கட்டாயங்கள் குறித்து ஆழமான சிறப்புரையை நிகழ்த்தினார். வணிகங்கள் நீதி மற்றும் நியாயத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்வதில் ஆதாரமாக செயல்படும் இ.எஸ்.ஜி, கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2051913
***
BR/KV
(Release ID: 2052079)
Visitor Counter : 33