பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

"இரட்டை என்ஜின் அரசு 2047-ல் வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 02 SEP 2024 6:46PM by PIB Chennai

இரட்டை என்ஜின் அரசு 2047-ல் வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

 

செய்தியாளரிடம் பேசிய அவர், இந்தத் தேர்தல் "இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய படி" என்று வர்ணித்தார்.

 

ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக, ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலைக் காணும் - பிராந்தியத்தின் துடிப்பான ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

மே 26, 2014 அன்று பிரதமர் மோடியின் பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து, தேசிய அளவில் பல புரட்சிகர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அவை பிராந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அவர் நினைவு கூர்ந்தார். பிரதமர் மோடி "பழமையான கட்டுப்பாடுகளிலிருந்து இந்தியாவை திறம்பட விடுவித்துள்ளார்" என்று அவர் கூறினார்.

 

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜில்லா பரிஷத் நிறுவப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் தன்னாட்சி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். பல தசாப்தங்களுக்கு முன்பு 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்பு திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், முந்தைய தலைவர்களின் உள்நோக்கங்கள் மற்றும் சொந்த நலன்கள் காரணமாக ஜம்மு & காஷ்மீர் ஒரு விதிவிலக்காக இருந்தது. 370 வது பிரிவை ரத்து செய்தது, இந்த மாற்றத்தில் ஒரு முக்கியமான படியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

தொலைநோக்குத் திட்டம் 2047 உலகளவிலும் உள்நாட்டிலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் கோடிட்டுக் காட்டினார். 2047-ஐ நாம் 2024-ன் முப்பட்டகத்தின் மூலம் பார்க்கும்போது, தற்போதைய பல கருத்துகள் வழக்கற்றுப் போய்விடும் என்று வலியுறுத்தினார்.

 

டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநிலத்தில் முதலமைச்சரின் தொடர்ச்சியான ஆதரவுடன், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக் கதையிலும், விஷன் இந்தியா @ 2047 ஐ நனவாக்குவதிலும் ஜம்மு & காஷ்மீருக்கு "இரட்டை என்ஜின் அரசு" முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.

 

***

(Release ID: 2050988)

PKV/RR/KR



(Release ID: 2051575) Visitor Counter : 17