குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர சட்ட மேலவையின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்

Posted On: 03 SEP 2024 7:41PM by PIB Chennai

மும்பையில் இன்று (செப்டம்பர் 3, 2024) நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவையின் நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், மகாராஷ்டிர சட்டமன்ற மேலவை தொடங்கப்பட்டதிலிருந்தே, மகாராஷ்டிர மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது என்று கூறினார். இது பொறுப்புமிக்க மேல் சபையாக  உள்ளது என்றும், பேரவையின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். சிறந்த பங்களிப்புக்காக விருதுகள் பெற்ற இரு அவைகளின் உறுப்பினர்களையும் அவர் பாராட்டினார்.

ஆரோக்கியமான விவாதம் மற்றும் உரையாடலின் பாரம்பரியத்தை நிறுவியதன் மூலம் மகாராஷ்டிர சட்டமன்ற மேலவை ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்தியுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். மேலும், பேரவையின் உறுப்பினர்கள் பொது நலனுக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை மற்றும் சட்டமன்றங்களில் உள்ள சட்ட மேலவைகள் இரண்டு அவைகளைக் கொண்டுள்ளதால், அவை மூத்தோர் அவை என்று அழைக்கப்படுகின்றன என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்த அவைகளில் குறைந்தபட்ச வயது வரம்பு அதிகமாக இருப்பதால், அதிக அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் பெரும்பாலும் காணப்படுவதாக தெரிவித்தார்.

----

IR/KPG/DL


(Release ID: 2051509) Visitor Counter : 59