பாதுகாப்பு அமைச்சகம்
அகில இந்திய என்.சி.சி தல் சைனிக் முகாம் புதுதில்லியில் தொடங்கியது
Posted On:
03 SEP 2024 2:36PM by PIB Chennai
அகில இந்திய என்.சி.சி தால் சைனிக் 12 நாள் முகாம் 2024 செப்டம்பர் 03 அன்று புதுதில்லியில் தொடங்கியது. இதை என்.சி.சி கூடுதல் டைரக்டர் ஜெனரல் (பி) மேஜர் ஜெனரல் சித்தார்த் சாவ்லா திறந்து வைத்தார். 2024 செப்டம்பர் 13 அன்று முடிவடையும் இந்த முகாமில், நாடு முழுவதும் உள்ள 17 இயக்குநரகங்களைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமியர் உட்பட 1,547 கேடட்கள் பங்கேற்பார்கள்.
இந்த முகாமில் பங்கேற்பாளர்கள் தடை பயிற்சி, வரைபடம் படித்தல் மற்றும் பிற போட்டிகள் உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இந்த நடவடிக்கைகள் உடல் சகிப்புத்தன்மை, மன ஒருமை மற்றும் குழுப்பணி ஆகியவற்றை சோதிக்கவும் மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு அதிவேக பயிற்சி அனுபவத்தை வழங்குகிறது.
அப்போது பேசிய மேஜர் ஜெனரல் சாவ்லா, என்.சி.சி வழங்கும் தனித்துவமான வாய்ப்புகளை சுட்டிக் காட்டினார். இது இளைஞர்களிடையே சாகசம், ஒழுக்கம் மற்றும் பண்பை எவ்வாறு வளர்க்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த முகாம் தேசிய மாணவர் படை வீரர்கள் தங்களது எதிர்கால நோக்கங்களில் சிறந்து விளங்கவும், நாட்டிற்கு நேர்மறையான பங்களிப்பை அளிக்கவும் ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இராணுவ விங் கேடட்களுக்காக பிரத்தியேகமாக உள்ள தால் சைனிக் முகாம், விரிவான பயிற்சி மற்றும் பண்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது, இது நாட்டின் இளைஞர்களிடையே தலைமைத்துவம் மற்றும் குழுப்பணியின் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-----
IR/KPG/KR/DL
(Release ID: 2051462)