ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் @தில்லி ஹாட்டில் சாப்- நிஃப்டிற்கு ஏற்பாடு
Posted On:
02 SEP 2024 3:49PM by PIB Chennai
தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) ஜவுளி அமைச்சகத்துடன் இணைந்து, 2024 செப்டம்பர் 2 முதல் 15 வரை புதுதில்லியில் உள்ள தில்லி ஹாட் INA-ல் சாப்- நிஃப்ட் @ தில்லி ஹாட் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவின் கைத்தறி மற்றும் கைவினை பாரம்பரியத்தின் அழியாத முத்திரையின் சாப் – இம்ப்ரஷன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது . இந்த நிகழ்வு NIFT கைவினை தொகுப்பு முன்முயற்சியைக் காட்டுகிறது, NIFT மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இடையிலான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுகிறது. சிறந்த ஃபேஷன் மற்றும் இந்திய கைவினைத்திறனை வெளிப்படுத்துவதில், நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சாப்-நிஃப்ட் @தில்லி ஹாட் ஒரு சான்றாகும்.
பன்முக அணுகுமுறையுடன், டில்லி ஹாட்டில் நிஃப்டின் பங்கேற்பு, கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் கைவினை அடிப்படையிலான பயன்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதுடன், அதன் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும். இந்த தனித்துவமான ஒத்துழைப்பு நிஃப்ட் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு, தங்கள் திறமை மற்றும் படைப்பு பார்வையை பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்த ஒரு அற்புதமான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தில்லி ஹாட்டில் கைவினைஞர்கள், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் கூட்டு அரங்கு 160-க்கும் மேற்பட்டவை. இந்த கைவினைஞர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து வரவழைக்கப்பட்டு, வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் பாரம்பரிய திறன்கள், நடைமுறைகள், மாறிவரும் போக்குகள் மற்றும் சந்தைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதற்காக தங்கள் கதவுகளைத் திறந்து வைப்பதன் மூலம், நிஃப்ட் கைவினைத் தொகுப்பு முன்முயற்சியில் தீவிரமாக பங்கேற்றுள்ளதால், அவர்கள் நிஃப்ட்டுடன் ஒரு சிறப்பு பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த கைவினைஞர்கள் நிஃப்ட் மாணவர்களுடன் இணைந்து உருவாக்கும் போது வழிகாட்டிகளின் பங்கை வகித்துள்ளனர்.
கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு ஆணையர் அலுவலகங்களுடன் இணைந்து, ஜவுளி அமைச்சகத்தின் கைவினைத் தொகுப்பு முன்முயற்சியை நிஃப்ட் மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், மாணவர்கள் கைவினை ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல், கைவினை அடிப்படையிலான வடிவமைப்பு திட்டங்களை மேற்கொள்வதுடன் மற்றும் கைவினைஞர்களுடன் இணைந்து உருவாக்குகின்றனர். இந்தப் படைப்புகள் காட்சிக்கு நிஃப்ட் பெவிலியனில் வைக்கப்படும்.
ஃபேஷன் ஷோகேஸ் – சமன்வ, இந்த நிகழ்வில், நிஃப்டின் திறமையான முன்னாள் மாணவர்களிடமிருந்து இணைந்து உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளின் தொகுப்பு இடம்பெறும். இந்திய கலாச்சார பாரம்பரியத்தை கௌரவிக்கும் அதே வேளையில், புதுமையை வளர்ப்பதற்கான நிஃப்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய நுட்பங்களுடன், நவீன அழகியலை கலக்கும் பல்வேறு குழுக்கள் இந்த காட்சி பெட்டியில் இடம்பெறும்.
நிலையான நடைமுறைகள் குறித்த கலந்துரையாடல் அரங்குகள் – ஸ்ரீஜன், பல்வேறு ஈர்க்கக்கூடிய நேரடி பட்டறைகள் மற்றும் நிபுணர்கள் தலைமையிலான அமர்வுகளை உள்ளடக்கியதாக நடைபெறும். இந்த பட்டறைகள், நிலையான நடைமுறைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கும், ஆர்வமுள்ள வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினை ஆர்வலர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் திறன்களை வழங்கும்.
பாரம்பரிய கைவினைஞர்களின் கைவினை செயல்விளக்கங்கள் – சம்பதா பாரம்பரிய கைவினை நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த கைவினைஞர்களின் நேர்த்தியான திறன்களை வெளிப்படுத்துகிறது. இந்த கைவினைஞர்களின் சிக்கலான திறன்களை கௌரவிப்பதை நிஃப்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில், தற்போதைய ஃபேஷனில் பாரம்பரிய நுட்பங்களின் பங்கிற்கு அதிக பாராட்டுதலை வளர்க்கிறது. பங்கேற்பாளர்கள் இந்திய கைவினைப்பொருட்களை வரையறுக்கும் கலைத்திறன் மற்றும் சிக்கலான தன்மை பற்றிய நேரடி நுண்ணறிவைப் பெறுவார்கள்.
கைவினை-வடிவமைப்பு பரிசோதனையின் முடிவுகளை ஆராய்வதற்காக, கைவினை, வடிவமைப்பு மற்றும் கலை ஆகியவற்றின் பகுதிகளை இணைக்கும் ஒரு புதுமையான பட்டறை, டாக்டர் டிம்பிள் பாஹ் -ஆல் வடிவமைக்கப்பட்டு, 'கலாமந்தன்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி கைவினைஞர்கள், மாணவர்கள் மற்றும் தில்லி வளாகத்தில் உள்ள பேஷன் கம்யூனிகேஷன் துறைக்கு இடையிலான ஒரு ஆற்றல்மிக்க கூட்டாண்மையை முன்வைக்கிறது. கண்காட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதியும் கலை பார்வை மற்றும் திறமையின் சிந்தனைமிக்க கலவையை பிரதிபலிக்கிறது, இதன் விளைவாக, புதிய படைப்பு எல்லைகளை ஆராயும் போது, பாரம்பரிய கைவினைத்திறனை மதிக்கும் புதுமையான வடிவமைப்புகள் உருவாகின்றன.
இசை நிகழ்ச்சிகள்- இண்டி இசைக்குழுக்களின் வரிசையின் தரங், சமகால இசையின் துடிப்பான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலிகளை வெளிப்படுத்தும். நாட்டுப்புற,ஒலி முதல் மின்னணு மற்றும் மாற்று வகைகள் வரை, இந்த நிகழ்ச்சிகள், நிகழ்வுக்கு ஒரு மாறும் இசை பரிமாணத்தை சேர்ப்பதுடன், பார்வையாளர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும்.
தில்லி ஹாட்டில் நிஃப்டின் மார்க்கியூ காட்சி, அதன் நன்கு நுணுக்கமான கல்வி உத்தியை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த சிறப்புமிக்க சந்தையில் காட்சிப்படுத்துவதன் மூலம், சமூகத்துடன் ஈடுபடுவது, இந்திய கைவினைப்பொருட்களின் வளமான திரைச்சீலைகளைக் கொண்டாடுவது, இளம் ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிப்பது மற்றும் எதிர்கால தலைமுறை வடிவமைப்பாளர்களை ஊக்குவிப்பதை நிஃப்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
***
MM/RS/KR/DL
(Release ID: 2051007)
Visitor Counter : 29