குடியரசுத் தலைவர் செயலகம்
செப்டம்பர் 2 முதல் 4 வரை குடியரசுத்தலைவர் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
01 SEP 2024 7:27PM by PIB Chennai
இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024 செப்டம்பர் 2 முதல் 4 வரை மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார் .
செப்டம்பர் 2-ஆம் தேதி, கோலாப்பூர் வாரணாநகரில் நடைபெறும் ஸ்ரீ வாரணா மகளிர் கூட்டுறவு குழுமத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 3-ஆம் தேதி புனேவில் நடைபெறும் சிம்பயோசிஸ் இன்டர்நேஷனலின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 21-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அதே நாளில், மும்பையில் மகாராஷ்டிர சட்டமன்ற மேலவையின் நூற்றாண்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 4 அன்று, லத்தூர் உத்கிரில் புத்த விகாரை குடியரசுத்தலைவர் திறந்து வைக்கிறார். உத்கிரில் மகாராஷ்டிர அரசின் 'ஷாசன் அப்லியா தாரி' மற்றும் 'முக்யமந்திரி மாஜி லட்கி பஹின்’ திட்ட பயனாளிகள் மத்தியிலும் அவர் உரையாற்றுவார்.
BR/KR
***
(Release ID: 2050754)
Visitor Counter : 51