தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அனைவரையும் உள்ளடக்கிய நிதி உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்  இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி 7- வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடியது

Posted On: 01 SEP 2024 2:40PM by PIB Chennai

நாடு முழுவதும் நிதிச் சேர்க்கையை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி இன்று தனது 7வது நிறுவன தினத்தை  பெருமையுடன் கொண்டாடியது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2018 ஆம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் வெளியிடப்பட்டதிலிருந்து, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாட்டின் நிதிப்பரப்பை மாற்றுவதில் முன்னணியில் உள்ளது, இது பின்தங்கிய, வங்கி சேவை பெறாத குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் அணுகக்கூடிய, மலிவான, நம்பகமான டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்குகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் 1,61,000 அஞ்சலகங்களையும்  1,90,000 தபால் ஊழியர்களையும் கொண்ட இந்தியா போஸ்டின் விரிவான வலையமைப்பைப் பயன்படுத்தி, நிதி உள்ளடக்க இடைவெளியைக் குறைப்பதில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் புதுமையான அணுகுமுறை நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களிலும்  தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள லட்சக்  கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய வங்கி சேவைகளை உறுதி செய்துள்ளது,.ஒவ்வொரு  வீட்டு வாசலிலும்  டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்குப்  பங்களிப்பு செய்கிறது.

7-வது ஆண்டு விழாவில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், "இந்தியாவின் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகாரம் அளித்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை நாம் கொண்டாடும் இந்த வேளையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி  இதுவரை ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து  பெருமிதம் கொள்கிறோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், குறிப்பாக வடகிழக்கு உட்பட நாட்டின் தொலைதூரப் பகுதிகளில்  உள்ள அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதில்  எங்கள் இயக்கம் உறுதியாக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும்  புதுமையுடனும்  நிதி உள்ளடக்கத்தை நோக்கிய எங்கள் பயணம் தொடர்வதை எதிர்நோக்குகிறோம்" என்றார்.

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் முக்கிய சாதனைகள்

9.88 கோடி வாடிக்கையாளர் கணக்குகளைக் கொண்டுள்ளது.

12 லட்சத்துக்கும் அதிகமான வியாபாரிகள்.

பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நேரடிப் பயன் பரிமாற்றங்களில்  ரூ. 45,000 கோடிக்கு மேல் வெற்றிகரமாக வழங்கப்பட்டது.

7.10 கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டைகளுக்கான மொபைல் எண் புதுப்பிப்புகளை எளிதாக்கியது.

20 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050593

*****

SMB / KV

 

 



(Release ID: 2050642) Visitor Counter : 187