பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய விமானப்படையின் தலைமை  கமாண்டராக  ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்றார்

Posted On: 01 SEP 2024 1:49PM by PIB Chennai

மத்திய விமானப்படையின் தலைமை  கமாண்டராக  ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் 2024, செப்டம்பர் 1 அன்று பொறுப்பேற்றார்

ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் 1986 டிசம்பர் 06 அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர் பல்வேறு விமானங்களில் 3300 மணிநேரத்திற்கும் அதிகமாக  பறந்த அனுபவம் கொண்ட தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளர் ஆவார். இவர் மதிப்புமிக்க தேசிய பாதுகாப்பு அகாடமி, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி (பங்களாதேஷ்), தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.

37 ஆண்டுகளுக்கும் மேலான அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், விமானப்படை அதிகாரி உட்பட பல பதவிகளை வகித்துள்ளார். ஒரு காமாண்டிங் அதிகாரியாக, இவர் அதிநவீன மிராஜ் விமானங்களுடன் இந்திய விமானப் படைப்பிரிவுகளில் ஒன்றை மீண்டும் ஆயுதபாணியாக்கினார். பின்னர் மேற்குப் பிரிவில் ஒரு முன்னணி போர் விமான தளத்தையும் தெற்குப் பகுதியில் ஒரு முதன்மையான போர் பயிற்சி தளத்தையும் நிர்வகித்தார்தனது முந்தைய பதவிக்காலத்தில் நவீன  தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் பல புதியத்  திட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். 'சுய சார்பு' மீது நிலையான கவனம் செலுத்தும் அதே நேரத்தில் ..எஃப் நவீனமயமாக்கலை உறுதி செய்தார். இந்திய விமானப்படை தனது இலக்கை வெற்றிகரமாக அடைவதை உறுதி செய்ய, அனைத்து சூழ்நிலைகளிலும் மத்திய விமானப் படைப்பிரிவின் செயல்பாட்டுத் தயார்நிலை இவரின் முதன்மையான திட்டமாக இருக்கும்.

இவரது பாராட்டத்தக்க சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகஅதி விஷிஷ்ட் சேவா பதக்கம், வாயு சேனா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவை  குடியரசுத் தலைவரால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

*****

 

SMB / KV

 

 


(Release ID: 2050617) Visitor Counter : 54