பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனுபவ் விருதுகள் 2024


அனுபவத்திலிருந்து நிபுணத்துவம் வரை: ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளை கௌரவித்தல்

Posted On: 29 AUG 2024 4:38PM by PIB Chennai

ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் அயராத பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தவும், அங்கீகரிக்கவும் ஒரு தளமாக 'அனுபவ்'  இணையதளம் 2015, மார்ச்சில் தொடங்கப்பட்டது.

இந்த புதுமையான திட்டம், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களை அவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் பணிக்காலத்தில் பெற்ற நுண்ணறிவுகளை ஆவணப்படுத்த ஊக்குவிக்கிறது. எதிர்கால நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கு தேவையானவற்றை உருவாக்குவதே இந்த முயற்சியின் முதன்மை நோக்கமாகும். பல்வேறு அரசு கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்பு தொடர்பான தகவல்களை தெரிவிக்கவும் இது அனுமதிக்கிறது.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், 2016-ம் ஆண்டில் வருடாந்திர விருதுகள் தொடங்கப்பட்டன.

அனுபவ் விருதுகள் 2024

7-வது அனுபவ் விருதுகள் வழங்கும் விழா 2024, ஆகஸ்ட் 28 அன்று புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் 33% பெண்கள் விருது பெற்றனர். இது நிர்வாகத்தில் அவர்களின் வளர்ந்து வரும் பங்கை பிரதிபலிக்கிறது.

5 அனுபவ் விருதுகள் மற்றும் 10 ஜூரி சான்றிதழ்களை உள்ளடக்கிய இந்த விருதுகள், பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்தன. நிர்வாகப் பணி, நல்லாட்சி, ஆராய்ச்சி, நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், கணக்குகள், களப்பணி பங்களிப்புகள் மற்றும் பணி மேம்பாட்டிற்கான ஆக்கபூர்வமான பின்னூட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

விருதுகள் இரண்டு நிலைகளில் வழங்கப்பட்டன.

1. அனுபவ் விருதுகள்: பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

2. ஜூரி சான்றிதழ்கள்: கௌரவிக்கப்பட்டவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

2024 விழாவிற்கு, 22 வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து பங்களிப்புகள் பெறப்பட்டன.

இந்த விழாவில் விருது பெற்ற 15 பேரின் தொழில்முறை சாதனைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு குறும்படம் மற்றும் மேற்கோள் கையேடு வெளியிடப்பட்டது.

98 அமைச்சகங்கள்/ துறைகள்/ அமைப்புகள் அனுபவ் இணைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 2024, ஆகஸ்ட் 29 வரை 10,804 கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049778

------------

IR/RS/DL


(Release ID: 2049877) Visitor Counter : 57