தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் புது தில்லி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உள்ளடக்கிய சினிமா குறித்த விவாதம்

Posted On: 28 AUG 2024 7:47PM by PIB Chennai

தில்லியில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) மண்டல அலுவலகத்தில் இன்று கலந்துரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது. இது திரைப்படங்களில் தரநிலைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் உள்ளிட்டோரும், மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.  தில்லி சிபிஎஃப்சி மண்டல அதிகாரி திரு மகேஷ் குமார் பேசுகையில், பார்வை,செவிப்புலன் குறைபாடுகள் கொண்ட பார்வையாளர்களுக்கு உள்ளடக்கம்  சென்றடைவதை உறுதி செய்வதற்காக கட்டாய அம்சங்களை இணைப்பது குறித்து விவாதித்தார்.

பார்வையாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான திரைப்பட அனுபவத்தை மேம்படுத்துவதிலும் தரநிலைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்த அம்சங்களை அமல்படுத்துவதில் சிந்தனைமிக்க அணுகுமுறை தேவை என திரு மகேஷ் குமார் வலியுறுத்தினார்.

பார்வையற்றோருக்கான சங்கத்தின் தலைவர் திரு ஏ எஸ் நாராயணன், சினிமாவை மேலும் உள்ளடக்கிய அனுபவமாக மாற்றுவதில் தரநிலைகளின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டினார்.

திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இந்த வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்க தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2049530

***

PLM/AG/DL



(Release ID: 2049577) Visitor Counter : 32