உள்துறை அமைச்சகம்

அவசரகால மேலாண்மையில் ஒத்துழைப்புக்கான ரஷ்ய-இந்திய கூட்டு ஆணையத்தின் 2-வது கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது

Posted On: 28 AUG 2024 7:07PM by PIB Chennai

அவசரகால மேலாண்மையில் ஒத்துழைப்புக்கான ரஷ்ய-இந்திய கூட்டு ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் இன்று (2024 ஆகஸ்ட் 28) ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்தியக் குழுவுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தின் போது, 2025-2026-ம் ஆண்டிற்கான ஒத்துழைப்புக்கான ரஷ்ய-இந்திய கூட்டு ஆணையத்தின் செயல் திட்டத்தில் இந்தியாவின் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், ரஷ்யாவின் இயற்கை பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு குரென்கோவ் அலெக்சாண்டர் வியாசெஸ்லாவோவிச் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த திட்டத்தை 2025-2026-ம் ஆண்டில் செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ள. மேலும் பேரிடர் மேலாண்மைத் துறையில் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்வதைத் தொடரவும் முடிவு செய்துள்ளன. அவசரகால மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்புக்கான இந்திய-ரஷிய கூட்டு ஆணையத்தின் முதல் கூட்டம் 2016-ல் புதுதில்லியில் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2049504

***

PLM/AG/DL



(Release ID: 2049532) Visitor Counter : 46