தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

முடிவுக்கு வராத வர்த்தக தொலைத்தொடர்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மறுஆய்வு ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது

Posted On: 28 AUG 2024 1:39PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று தொலைத்தொடர்பு வர்த்தக தகவல் தொடர்பு வாடிக்கையாளர் முன்னுரிமை விதிமுறைகள், 2018 (டி.சி.சி.சி.பி.ஆர் -2018) மீதான மறுஆய்வு குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோரி ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டி.சி.சி.சி.பி.ஆர் -2018 பிப்ரவரி-2019 இல் கோரப்படாத வணிக தகவல்தொடர்பு (UCC) சிக்கலை தீர்க்க செயல்படுத்தப்பட்டது. இந்த விதிமுறைகள் தேவையற்ற விளம்பர அழைப்புகள், செய்திகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் வணிகங்கள் அவற்றைப் பெற ஒப்புதல் அளித்த அல்லது விருப்பத்தேர்வுகளை அமைத்த வாடிக்கையாளர்களுக்கு இலக்கு தகவல்தொடர்புகளை அனுப்ப அனுமதிக்கின்றன.

ஒழுங்குமுறை கட்டமைப்புகளை செயல்படுத்தும்போது, சில சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆலோசனை அறிக்கை அமலாக்கத்தின் போது கவனிக்கப்பட்ட, உடனடி கவனம் தேவைப்படும் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பான ஒழுங்குமுறைகளின் விதிகளில் திருத்தம் தேவைப்படலாம். ஆலோசனை அறிக்கையில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளின் பரந்த வகை பின்வருவனவற்றை உள்ளடக்கியது-

•   வணிக தகவல்தொடர்புகளின் வரையறைகள்.

•   புகார் தீர்வு தொடர்பான விதிகள்.

•   யூசிசி கண்டறிதல் அமைப்பு

•   நிதி ஊக்கத்தொகை தொடர்பான ஏற்பாடுகள்.

• அனுப்புநர்கள், டெலிமார்க்கெட்டர்கள் தொடர்பான ஏற்பாடுகள்.

•  அதிக எண்ணிக்கையிலான குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ் பகுப்பாய்வு.

ஸ்பேம் அழைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும், பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்களுக்கு (யுடிஎம்) எதிரான கடுமையான விதிகள், மேம்பட்ட புகார் தீர்வு வழிமுறைகள், மிகவும் பயனுள்ள யுசிசி கண்டறிதல் அமைப்புகள், ஒழுங்குமுறை விதிகளை மீறுவதற்கான வலுவான நிதி ஊக்கத்தொகை, அனுப்புநர்கள், டெலிமார்க்கெட்டர்களுக்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கான பகுதிகள் குறித்த உள்ளீடுகளை டிராய் கோருகிறது.

இந்த ஆலோசனை அறிக்கை டிராய் இணையதளமான www.trai.gov.in இல் கிடைக்கிறது.  ஆலோசனை அறிக்கை குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகள் 2024 செப்டம்பர் 25-க்குள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.   எதிர் கருத்துகள், ஏதேனும் இருந்தால், 2024 அக்டோபர் 09-க்குள் சமர்ப்பிக்கப்படலாம். கருத்துரைகள், எதிர் கருத்துகளை மின்னணு வடிவில் advqos@trai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் ஏதேனும் விளக்கம்  தகவலுக்கு, திரு ஜெய்பால் சிங் தோமர், ஆலோசகர் (QoS-II) advqos@trai.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

***

PLM/AG/DL



(Release ID: 2049477) Visitor Counter : 23