குடியரசுத் தலைவர் செயலகம்
ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
25 AUG 2024 5:20PM by PIB Chennai
ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு, இந்தியர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் சக இந்திய மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜென்மாஷ்டமி நாளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குகிறோம். இந்த ஆனந்த பண்டிகை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக கொள்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட நம்மை அர்ப்பணிக்க நம்மை ஊக்குவிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலான ஸ்ரீமத் பகவத் கீதை, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உத்வேகம் அளிப்பதுடன், அறிவொளியின் நித்திய ஆதாரமாகவும் திகழ்கிறது.
இந்தத் தருணத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போதனைகளை உள்வாங்கி, நாட்டின் முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றுக்காக பணியாற்ற உறுதியேற்போம்"
இவ்வாறு குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
*****
PLM / KV
(रिलीज़ आईडी: 2048768)
आगंतुक पटल : 91