வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்திய-ஆஸ்திரேலிய சி.இ.சி.ஏ பேச்சுவார்த்தையின் 10 வது சுற்று சிட்னியில் ஐந்து துறைகளில் நடைபெற்றது

Posted On: 25 AUG 2024 9:40AM by PIB Chennai

இந்திய-ஆஸ்திரேலிய சி..சி. பேச்சுவார்த்தைகளின் 10வது சுற்று 2024 ஆகஸ்ட் 19-22 வரை சிட்னியில் சரக்கு, சேவைகள், டிஜிட்டல் வர்த்தகம், அரசின் கொள்முதல், மூல விதிகள் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நடைபெற்றது. இந்த ஒவ்வொரு துறையிலும் தீவிர விவாதங்கள் நடத்தப்பட்டன, மீதமுள்ள விதிகளில் ஒன்றிணைவதற்கான தெளிவு மற்றும் புரிதலைக் கொண்டு வந்தன.

 தலைமை பேச்சுவார்த்தையாளரும், இந்திய அரசின் வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளருமான திரு. ராஜேஷ் அகர்வால் இந்திய தூதுக்குழுவிற்குத் தலைமைத் தாங்கினார். ஆஸ்திரேலிய தூதுக்குழுவிற்கு அதன்  தலைமை பேச்சுவார்த்தையாளரும், ஆஸ்திரேலியாவின் டி.எஃப்..டியின் முதல் உதவிச் செயலாளருமான திரு. ரவி கேவல்ராம் தலைமை தாங்கினார். ஒருவருக்கொருவர் முன்மொழிவுகளை நன்கு புரிந்துகொள்வதன் மூலம் வேறுபாடுகளைக் குறைப்பதற்கான தீவிர விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை கூட்டத்தில் காண முடிந்தது. ஒரு சீரான முடிவை எட்டுவதற்கு உள்நாட்டு உணர்திறனை மனதில் கொண்டு இரு தரப்பினராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஐந்துத் துறைகள் குறித்த பேச்சுவார்த்தையின் முடிவுகள் தலைமைப் பேச்சுவார்த்தையாளர்களின் கூட்டுக் கூட்டத்திற்குத்  தெரிவிக்கப்பட்டன, இது அவர்களின் எதிர்கால பணிகளை வழிநடத்த ஏதுவாக அமைந்தது. ஐந்து  துறைகளின் கீழ் ஒருவருக்கொருவர் முன்மொழிவுகளை தெளிவாகப் புரிந்துகொண்டதன் அடிப்படையில், இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த சுற்றுக்கு முன்னர் இரு தரப்பிலிருந்தும் மெய்நிகர் முறையில் பேச்சுவார்த்தைக்கான செயல் திட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

கூடுதலாக, தலைமை பேச்சுவார்த்தையாளர்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மதிப்பாய்வு செய்தனர் மற்றும் 2022 டிசம்பர் 29 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-ஆஸ்திரேலியா .சி.டி.-இன் நேர்மறையான விளைவுகளை உருவாக்குவதன் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் உறுதிபூண்டனர். சி..சி. பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள பலன்களையும், இரு தரப்பினருக்கும் சமச்சீரான முடிவையும் அளிப்பதை உறுதி செய்ய இரு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆஸ்திரேலியா, இந்தியாவின் முக்கியமான வர்த்தக மற்றும் கேந்திர கூட்டாளியாக உள்ளது. இரு நாடுகளும் 14 நாடுகளின் செழிப்புக்கான இந்தோ பசிபிக் பொருளாதார மன்றம் மற்றும் முத்தரப்பு விநியோகச் சங்கிலி நெகிழ்வு முயற்சி ஆகியவற்றின் ஒரு பகுதியாக உள்ளன, இது பிராந்தியத்தில் விநியோகச் சங்கிலி நெகிழ்வை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய-ஆஸ்திரேலிய சி..சி. பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று 2024 நவம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது..

*****

BR / KV



(Release ID: 2048713) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi , Manipuri