குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தடய அறிவியல் நீதியின் மூலக்கல்லாகும்: குடியரசு துணைத்தலைவர்

Posted On: 23 AUG 2024 5:52PM by PIB Chennai

நீதி அமைப்பில் தடய அறிவியலின் முக்கிய பங்கை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று வலியுறுத்தினார். தடய அறிவியல் என்பது குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல; நிரபராதி என்பதை நிரூபிப்பதிலும் இது இன்றியமையாதது.   ஒரு அப்பாவியின் கதறலைக் கேட்க முடியாத ஒரு சமூகம் வீழ்ச்சியடைய விதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே இன்று உரையாற்றிய திரு. தன்கர், நீதியின் கருச்சிதைவுகளைத் தடுப்பதில் தடய அறிவியலின் இன்றியமையாத தன்மையை எடுத்துரைத்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும், நிரபராதிகள் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டார்.

தடய அறிவியல் ஒரு பன்முகத் துறை என்பதை அங்கீகரித்த திரு. தன்கர், நமது உலகின் மர்மங்களை அவிழ்ப்பதற்கும், நமது சமூகங்களைப் பாதுகாப்பதற்கும், நமது நாட்டின் வளர்ச்சிப் போக்கை வடிவமைப்பதற்கும் தடய அறிவியல் முக்கியமானது என்று கூறினார்.

மாணவர்களும் தொழில் வல்லுனர்களும் மிக உயர்ந்த தரத்திலான நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நீர்த்துப்போகச் செய்வது ஒரு பயங்கரவாதியை தப்பிக்க அனுமதிப்பது அல்லது ஒரு நிரபராதியை சிறைக்கு அனுப்புவது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தினார். எப்போதும் உண்மை உங்கள் பணியை வழிநடத்தட்டும், பக்கச்சார்பு மற்றும் சமரசம் இல்லாமல் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

-----

LKS/KPG/DL



(Release ID: 2048254) Visitor Counter : 15