விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பாட்னாவில் விவசாயிகளுடன் ஆலோசனை

प्रविष्टि तिथि: 23 AUG 2024 3:29PM by PIB Chennai

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். விவசாயம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும், விவசாயிகள் அதன் ஆன்மா என்றும் கூறிய திரு சவுகான், விவசாயிகளுக்கு சேவை செய்வதற்கான பணியை தனக்கு வழங்கிய பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமர் திரு மோடி செங்கோட்டையில் உரையாற்றிய போது, தாம்  மூன்று மடங்கு வேகமாக பணியாற்ற இருப்பதாகவும், நாட்டின் விவசாயிகளின் நலனுக்காக ம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவிருப்பதாகவும் கூறியதை மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயத்தின் பன்முகத்தன்மை அரசாங்கத்தின் வழிகாட்டி வரைபடத்தில் உள்ளது என்றும், பாரம்பரிய பயிர்களுடன், அதிக பணம் தரும் பயிர்களை ஊக்குவிப்பதில் அரசு எந்தக் முயற்சியையும் விட்டுவைக்காது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

பிரதமர் தலைமையில் இயற்கை விவசாய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது உற்பத்தியைக் அதிகரிக்கும்.  விவசாயிகள் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

---

LKS/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2048208) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu