தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல்கள் - பொது, காவல்துறை, செலவின பார்வையாளர்களுக்கான ஆலோசனை அமர்வைத் தேர்தல் ஆணையம் நடத்தியது

Posted On: 22 AUG 2024 4:10PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் தேர்தல் பார்வையாளர்களுக்கான விளக்கக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், டாக்டர் எஸ் எஸ் சந்து ஆகியோர், பார்வையாளர்களுக்கு அவர்களின் பணிகள் குறித்து விளக்கினார்.

புதுதில்லியில் உள்ள ரங் பவன் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விளக்கக் கூட்டத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், இந்திய வருவாய் சேவை உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீர், ஹரியானாவில் சுமார் 200 பொது பார்வையாளர்கள், 100 காவல்துறைப் பார்வையாளர்கள், 100 செலவின பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பார்வையாளர்களுக்கு அவர்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், ஆணையத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் பார்வையாளர்கள் தொழில்முறைரீதியாக செயல்பட வேண்டும் என்றும், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மொழி தடைகளை கடந்து தகவல்தொடர்பில் இடைவெளிகள் இல்லை என்பதை உறுதி செய்யவும் அவர் அறிவுறுத்தினார்.

தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தனது உரையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு பார்வையாளர்கள் முழுமையான தேர்தல் சூழலை கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையர் டாக்டர். சந்து பார்வையாளர்களிடையே ஆற்றிய உரையில், தேர்தல்களை நடத்துவதை மேம்படுத்தும் ஒரு நேர்மையான சுழலை உருவாக்குதல், வெளிப்படையான தன்மை மற்றும் பதிலளிக்கும் தன்மை அவசியம் என்று கூறினார்.

 

ஆணையத்தின் பல்வேறு புதிய முயற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து அவர்களுக்கு உணர்த்தும் வகையில் முக்கியமான நுண்ணறிவுகள் குறித்து அனைத்து பார்வையாளர்களுக்கும் விளக்கப்பட்டது.

******

(Release ID: 2047681)

 

 

 



(Release ID: 2047977) Visitor Counter : 20