அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பங்களை குறு, சிறு தொழில்முனைவோருக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை- சிஎஸ்ஐஆர், எல்யுபி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 21 AUG 2024 6:18PM by PIB Chennai

அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (CSIR-சிஎஸ்ஐஆர்) லகு உத்யோக் பாரதியும் (LUB) சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் 21 ஆகஸ்ட் 2024 அன்று குறு, சிறு தொழில்முனைவோருக்கு சிஎஸ்ஐஆர் தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

லகு உத்யோக் பாரதி என்பது 1994 முதல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட குறு  சிறு தொழில்களுக்கான அகில இந்திய அமைப்பாக திகழ்கிறது. இந்தியாவின் 27 மாநிலங்களில் 575 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 51000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனமாகும் இது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சிஎஸ்ஐஆரின் 100 தொழில்நுட்பம் / தயாரிப்புகளை 100 நாட்களுக்குள் அடையாளம் அடையாளம் காணப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கொண்டு செல்வது ஆகும்.

நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி தலைமை வகித்தார்.

***

PLM/DL


(Release ID: 2047390) Visitor Counter : 56