குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்திய தொழில் கூட்டமைப்பின் 19-வது இந்திய-ஆப்பிரிக்க வர்த்தக மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரை
Posted On:
21 AUG 2024 12:59PM by PIB Chennai
இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள இந்த தனித்துவமான மதிப்புமிக்க பிரதிநிதிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம். அனைத்து மதிப்புமிக்க பிரமுகர்களையும் பாரதத்திற்கு வரவேற்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களின் நல்வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஒரே எதிர்காலத்தை உருவாக்குதல்' என்ற இந்த இந்திய-ஆப்பிரிக்க வர்த்தக மாநாட்டின் மையக்கருத்து, நமது நாகரிக நெறிமுறைகளில் ஆழமாக பதிந்துள்ளதுடன், 'ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற இந்தியாவின் ஜி20 தலைமையின் குறிக்கோளில் விரிவடைந்துள்ளது.
சமகாலத்துக்குப் பொருத்தமான கருப்பொருள் குறித்து விவாதிப்பதற்கும், அனைவரின் நல்வாழ்வுக்கான பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் நாம் ஒன்றிணைவதற்கான வாய்ப்பாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
'ஒரே எதிர்காலத்தை உருவாக்குதல்' என்பது மனிதகுலத்தின் நிலைத்தன்மைக்கு இன்றியமையாதது, மேலும் இந்த சவாலை இனியும் தாமதப்படுத்த முடியாது, பொதுமக்கள் பங்கேற்பு அதன் தனிச்சிறப்பாகும்.
மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து நாடுகளும் கூட்டாக தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
இந்தியா-ஆப்பிரிக்கா வளர்ச்சி ஒத்துழைப்பு குறித்த 19-வது இந்திய – ஆப்பிரிக்க வர்த்தக மாநாடு, வலுவான நிதி ஒத்துழைப்பு கூட்டாண்மை, உள்கட்டமைப்பு மாற்றம், விண்வெளித் துறை ஒத்துழைப்பு, விவசாயம், சுரங்கம், உணவு பதப்படுத்தும் துறைகளில் மதிப்புச் சங்கிலியை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி மற்றும் பங்கேற்பு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இரு தரப்பினருக்கும் நிச்சயமாக வாய்ப்புகளை வழங்கும். கடந்த பத்தாண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி, மிகப்பெரிய டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்ட பாரதம், ஒத்துழைப்புக்கான ஏராளமான வழிகளை வழங்குகிறது.
இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய உறவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறுகள், பொதுவான போராட்டங்கள், நியாயமான மற்றும் முற்போக்கான எதிர்காலம், சமத்துவமான உலக ஒழுங்கு ஆகியவற்றுக்கான பரஸ்பர விருப்பங்கள் ஆகியவை இந்த கூட்டுறவை இயற்கையானதாகவும், முன்னெப்போதையும் விட வலிமையானதாகவும் ஆக்கியுள்ளன. 43 ஆப்பிரிக்க நாடுகளில் 206 உள்கட்டமைப்பு திட்டங்களில் இந்தியா 12.37 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது
85 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகம் மற்றும் 75 பில்லியன் டாலர் முதலீடுகளுடன் ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மிகவும் துடிப்பான, மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள இந்தியா, 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு மின்னணு விசா வசதிகளை விரிவுபடுத்தியதன் மூலம் ஆப்பிரிக்காவுடன் மக்களுக்கு இடையேயான உறவுகளில் தனது பிணைப்பை வளர்த்துள்ளது.
16 புதிய தூதரகங்கள் திறக்கப்பட்டதன் மூலம் ஆப்பிரிக்காவில் தூதரக தடம் விரிவடைந்திருப்பது, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள இந்திய தூதரகங்களின் மொத்த எண்ணிக்கையை 46 ஆக உயர்த்தியுள்ளது நமது வளர்ச்சிப் பாதையின் அடையாளமாகும்.
கோவிட்-19 காலத்தில், ஆப்பிரிக்காவுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. இந்தியாவும் ஆப்பிரிக்காவும் வலுவான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளன, இந்தியாவின் ராணுவ பயிற்சி மற்றும் ஐ.நா.வின் மூன்றாவது பெரிய அமைதி காக்கும் பங்களிப்புகள் உள்ளன.
பல்வேறு வழிகளில் நட்புறவை வலுப்படுத்தி, அனைத்து மட்டங்களிலும் நமது ஒத்துழைப்பை மேம்படுத்தி, மனிதகுல நலனுக்காக ஒவ்வொரு துறையிலும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம், மனித வளம், வளமான கனிம வளம், வளமான இயற்கை வளங்கள் ஆகியவற்றின் முழு திறனை இருபுறமும் உணர்ந்து, ஏற்கனவே துடிப்பான இந்த ஒத்துழைப்பை புரட்சிகரமாக மாற்றுவதில் முதன்மையாக கவனம் செலுத்துவோம். மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உலகின் இந்தப் பகுதி உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும், உலகளாவிய நல்லிணக்கத்திற்கும் பங்களிக்கும்.
ஆகியவை விரிவாக்கத்திற்கு எதிரானவை. வரலாற்று ரீதியாக, இந்த தேசம் ஒருபோதும் விரிவாக்கத்தை நம்பியதில்லை. எனவே, நமது ஒத்துழைப்பை, வரலாற்றில் ஆழமாக கட்டமைக்கப்பட்டுள்ள ஒத்துழைப்பு மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக பெரிய உலகளாவிய மாற்றத்திற்கு பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047219
------------------
PLM/RS/KR
(Release ID: 2047258)