ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் விநியோகத் திட்டம்
Posted On:
20 AUG 2024 3:25PM by PIB Chennai
நாட்டில் கைத்தறித் தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறித் துறையை மேம்படுத்தவும், கைத்தறித் தொழிலாளர்களின் நலனுக்காகவும் முழுமையான ஆதரவை வழங்குவதற்காக, ஜவுளி அமைச்சகம் தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம் மற்றும் மூலப்பொருள் விநியோகத் திட்டத்தை, நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கைத்தறி நிறுவனங்கள் / தொழிலாளர்களுக்கு, தரம் உயர்த்தப்பட்ட தறிகள் மற்றும் உபகரணங்கள், சூரிய ஒளி விளக்குகள், தறிக்கூடம் கட்டுதல், தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பொது உள்கட்டமைப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கைத்தறி பொருட்களை விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
நெசவாளர்கள், முத்ரா கடன் / சலுகைக் கடன் திட்டத்தின் கீழ், தனிப்பட்ட நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நிறுவனங்களுக்கு விளிம்புத் தொகை உதவி; மூன்று வருட காலத்திற்கு கடன்களுக்கான வட்டி மானியம் மற்றும் கடன் உத்தரவாத கட்டணம் வழங்கப்படுகிறது.
கைத்தறித் தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டம், அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித் தொகை போன்றவற்றின் மூலம், கைத்தறித் தொழிலாளர்களின் நலனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. நலிந்த சூழலில் 60 வயதுக்கு மேற்பட்ட விருது பெற்ற நெசவாளர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் வகை செய்கின்றன.
மூலப்பொருள் வழங்கல் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் வீட்டு வாசலுக்கே நூலை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மானியத்தையும், பருத்தி ஹாங்க் நூல், உள்நாட்டு பட்டு, கம்பளி மற்றும் லினன் நூல் மற்றும் இயற்கை இழைகளின் கலப்பு நூலுக்கு 15% விலை மானியத்தையும் அமைச்சகம் வழங்குகிறது.
கைத்தறி ரகங்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக, கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமம், இந்திய கைத்தறி இரகங்களுக்கு உலக அளவில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சர்வதேச சந்தைப்படுத்தல் கண்காட்சிகள் / நிகழ்வுகளில் பங்கேற்று நடத்தி வருகிறது.
2015-ம் ஆண்டுஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டதின் போது, உயர்தர கைத்தறி இரகங்களின் பிராண்டிங்கிற்காக 'இந்திய கைத்தறி' வணிக முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. "இந்தியா கைத்தறி" வணிக சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை 184 வகைப்பாடுகளின் கீழ் 1,998 பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் -19 தொற்றுநோய்களின் போது கைத்தறி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அரசாங்கம் நாடு முழுவதும் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தது.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும், இந்தியாவை தற்சார்பு அடைவதற்கும் மத்திய அரசு, தற்சார்பு இந்தியா என்ற சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தது. பல்வேறு துறைகளின் தொழில்களுக்கு புத்துயிரூட்ட நிவாரணம் மற்றும் கடன் ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டன.
கைத்தறி நெசவாளர்களிடம் உள்ள உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்யுமாறு, மாநில கைத்தறி கழகங்கள் / கூட்டுறவு அமைப்புகள் / முகமைகளுக்கு அறிவுறுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், சந்தைப்படுத்தும் திறனை அதிகரிக்கவும், அதிக வருமானத்தை ஈட்டவும், நாட்டில் 151 கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கைத்தறி நெசவாளர்கள், தங்களது உற்பத்திப் பொருட்களை பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக, அரசு மின்னணு சந்தையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது நிதி விதி (ஜி.எஃப்.ஆர்) 2017-ன் விதி 153-ல் ஒரு திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மத்திய அரசுத் துறைகளுக்குத் தேவைப்படும் அனைத்து ஜவுளிப் பொருட்களிலும், கைத்தறி தோற்றம் கொண்ட பொருட்களிலிருந்து, கதர் கிராமத் தொழில்கள் கழகம் மற்றும் / அல்லது கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழு (எஸ்.எச்.ஜி) கூட்டமைப்புகள் போன்ற கைத்தறி குழுமங்களிலிருந்தும், கூட்டுப் பொறுப்புக் குழு (JLG), உற்பத்தியாளர் நிறுவனங்கள் (PC), கார்ப்பரேஷன்கள் மற்றும் பெஹசான் அட்டைகளை வைத்திருக்கும் நெசவாளர்களிடமிருந்து குறைந்தபட்சம் 20% கொள்முதல் செய்வது கட்டாயமாகும்".
கைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மெய்நிகர் கண்காட்சிகள் நடத்தி கைத்தறி உற்பத்தியாளர்களுக்கு பி2பி வாங்குவோர் / கைத்தறி தொழிலாளர்களுக்கான ஏற்றுமதி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 2020-21-ம் ஆண்டில் 10 மெய்நிகர் கண்காட்சிகளும், 2021-22-ம் ஆண்டில், 10 மெய்நிகர் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இது தவிர, நெசவாளர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் விற்கவும் 2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 211 உள்நாட்டு சந்தைப்படுத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
***
(Release ID: 2046903)
MM/AG/KR
(Release ID: 2046950)
Visitor Counter : 72