ஆயுஷ்
azadi ka amrit mahotsav

தொடர்ச்சியான மருத்துவக் கல்வித் திட்டத்துடன் யோகா கல்வி மற்றும் உயர் சிறப்பு சிகிச்சையை மேம்படுத்துதல்

Posted On: 20 AUG 2024 2:12PM by PIB Chennai

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் (MDNIY) அதன் வளாகத்தில், 2024 ஆகஸ்ட் 19 முதல் 24 வரை, ஆயுஷ் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான ஆறு நாள் தொடர் மருத்துவக் கல்வித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டம் தத்துவ, அறிவியல் மற்றும் நடைமுறை பரிமாணங்களில், யோகாவில் பங்கேற்பாளர்களின் கல்வி மற்றும் சிகிச்சை நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 6 நாள் திட்டத்தின் நோக்கம் பங்கேற்பாளர்களின் கல்வி மற்றும் சிகிச்சை அறிவை மீண்டும் உற்சாகப்படுத்துவதும் மேம்படுத்துவதும் ஆகும்.

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவன இயக்குநர் டாக்டர் காசிநாத் சமகண்டி உரையாற்றுகையில், "ராஷ்டிரிய ஆயுர்வேத வித்யாபீடத்தின் ஆதரவுடன், ஆயுஷ் அமைச்சகத்தின் நிதி உதவியுடன்  செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஆயுஷ் மருத்துவர்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  "அமைச்சகத்தின் தொடர் மருத்துவக் கல்வி (சிஎம்இ) திட்டம், குறிப்பாக, ஆயுஷ் மருத்துவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, யோகாவை அவர்களின் அன்றாட சிகிச்சை முறையில் தடையின்றி ஒருங்கிணைப்பதற்கான ஆதாரம் சார்ந்த அறிவு அடிப்படையில், வடிவமைக்கப்பட்டுள்ளது  என டாக்டர் சமகண்டி தெரிவித்தார்.

தொடக்க அமர்வின் போது, உயிரி மருத்துவ பொறியியல் மையத்தின் (சிபிஎம்இ) கௌரவ பேராசிரியர் டாக்டர் கே.கே.தீபக், திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், இது "யோகா மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் திறனை மேம்படுத்துவதற்கான தளம்" என்று விவரித்தார். "சரியான ஆராய்ச்சி முறைகள் இல்லாமல், மனித வாழ்க்கையில் யோகாவின் ஆழமான தாக்கத்தை போதுமான அளவு நிரூபிக்க முடியாது" என்று அவர் கூறினார்.  

இந்த திட்டம் சமீபத்திய ஆராய்ச்சி நுண்ணறிவுகளுடன் பாரம்பரிய யோகா கொள்கைகளின் கலவையை வழங்குகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து யோகா ஆராய்ச்சி முன்னணி வல்லுநர்கள் இந்தப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மதிப்புமிக்க பேச்சாளர்கள், யோகா பற்றிய உரை அறிவு, ஆரோக்கியத்திற்கான யோகா நடைமுறைகள், யோகாவின் சிகிச்சை பயன்பாடுகள், யோகாவின் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி போக்குகள் மற்றும் நவீன கற்பித்தல் முறைகள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் நுண்ணறிவு அமர்வுகளை வழங்குவார்கள்.

இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம், யோகாவின் முக்கியமான பகுதிகளில் பங்கேற்பாளர்களின் புரிதலை ஆழப்படுத்துவதும், பாரம்பரிய மற்றும் சமகால அறிவியல் கட்டமைப்புகளில் அவர்களின் அறிவை மேம்படுத்துவதும் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046863

***

MM/AG/KR



(Release ID: 2046905) Visitor Counter : 48