தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக தலைமை இயக்குநராக திரு அசோக் குமார் சிங் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 19 AUG 2024 3:05PM by PIB Chennai

மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக தலைமை இயக்குநராக திரு அசோக் குமார் சிங், புதுதில்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திரு அசோக் குமார் சிங் 1999 தொகுப்பை சேர்ந்த கேரள ஒதுக்கீட்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இதற்கு முன்பு அவர் கேரள அரசின் நீர்வளத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி உள்ளார். அவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு அமைப்புகளின் ஆளுகை மற்றும் மேலாண்மையில் பரந்த அனுபவம் உடையவர் ஆவார்.

மத்திய அரசில் அவர் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் செயல் இயக்குநராகவும், பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர், நிதி அமைச்சக இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் எம்.ஃபில் பட்டம் பெற்ற அவர், கான்பூர் ஐஐடியில் எந்திரவியல் பொறியியல் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

***

(Release ID: 2046581)

MM/RR/KR


(रिलीज़ आईडी: 2046605) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Assamese