உள்துறை அமைச்சகம்

அகமதாபாத் மாநகராட்சியில் ரூ.1003 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார்; நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

Posted On: 18 AUG 2024 5:33PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அகமதாபாத் மாநகராட்சியில்  ரூ.1003 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார்; நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்

அகமதாபாத் மாநகராட்சி நிகழ்வில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாஇன்று அகமதாபாத் நகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளில், காந்திநகர் மக்களவைத் தொகுதிக்கான  ரூ .730 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளும் அடங்கும்எஞ்சியவை  மற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளனஎன்றார். காந்திநகர் மக்களவைத் தொகுதி வளர்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளது என்று அவர் கூறினார்.

எதிர்கால சந்ததியினருக்காக 100 நாட்களில் 30 லட்சம் மரக்கன்றுகளை நட அகமதாபாத் மாநகராட்சி தீர்மானித்துள்ளதாக  அமைச்சர் தெரிவித்தார். பாராட்டத்தக்க இந்த இயக்கத்துடன் தாம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு சங்கத்தின் தலைவருக்கும், செயலாளருக்கும், ஒவ்வொரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவருக்கும், ஒவ்வொரு நகராட்சி கவுன்சிலருக்கும், அறிவார்ந்த மக்களுக்கும் தாம் கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், தொலைபேசியில்  அழைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதாபாத் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில், அருகிலுள்ள காலி நிலம் அல்லது குழந்தைகளின் பள்ளியில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரக்கன்றுகளை நடுமாறு திரு ஷா கேட்டுக்கொண்டார். நம் வாழ்நாளில், நாம் வெளியிடும் கரியமில வாயுவுக்கு சமமான அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய தேவையான மரக்கன்றுகளை நாம் நட வேண்டும் என்று அவர் கூறினார்.

பிரதமரும், குஜராத்தின் புதல்வருமான திரு நரேந்திர மோடி, 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற திட்டத்தை செயல்படுத்த  நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக திரு அமித் ஷா கூறினார். தாய் உயிருடன் இருந்தால், அவருடன் மரம் நட வேண்டும் என்றும், அவர் இறந்துவிட்டால், அவரது படத்துடன் மரத்தை நட வேண்டும் என்றும் அவர் கூறினார். நம் தாய்மார்களுக்கு நாம் கடன்பட்டிருப்பதை வெளிப்படுத்த இதைவிட சிறந்த வழி எதுவும் இல்லை. அகமதாபாதில் வசிப்பவர்களை 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில்  சேருமாறு திரு அமித் ஷா  வேண்டுகோள் விடுத்தார்.

மாநகராட்சி அழகான நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்களை உருவாக்கியுள்ளது. யோகாசனம் கற்பிக்க நல்ல ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்று அவர் கூறினார். உடற்பயிற்சி கூடமும், யோகாசனமும் இலவசமாகவும்  நீச்சல் குளம் குறைவான கட்டணத்துடனும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழகிய குளங்கள், ஆக்சிஜன் பூங்காக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046428.

*****

 

SMB / KV



(Release ID: 2046435) Visitor Counter : 20