எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு பொருட்களின் தேவை தொடர்ந்து அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
16 AUG 2024 11:50AM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள தேசிய எஃகு நிறுவனத்தில் (RINL) நாட்டின் 78-வது சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், தேசப்பற்றுடனும் கொண்டாடப்பட்டது. ஆலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு அதுல் பட் தேசிய கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் பங்கேற்ற எஃகு ஆலை ஊழியர்களிடையே உரையாற்றிய திரு அதுல் பட், ஆலைத் தொழிலாளர்கள், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
ஆலையின் செயல்பாடு பற்றிக் குறிப்பிட்ட அவர், 2023-ல் 1.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி வேகம், 2024-ல் சற்று அதிகரித்து 1.7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
உலகளவில் எஃகு இரும்பின் தேவை இந்த ஆண்டு 1.7 சதவீதம் அதிகரித்து 1,793 மெட்ரிக் டன்னாக இருக்கும் என்றார். இது 2025-ல், 1815 மெட்ரிக் டன்னை எட்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு பணிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப இரும்பு பொருட்களின் தேவையும் அதிகரித்து வருவதாக அதுல்பட் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045844
***
MM/AG/RR
(रिलीज़ आईडी: 2045869)
आगंतुक पटल : 90