சுற்றுலா அமைச்சகம்
பிரதமரின் சுதந்திர தின உரை உலக மகத்துவத்தை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தேசத்திற்கு ஊட்டுகிறது: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
Posted On:
15 AUG 2024 2:23PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை நமது நம்பிக்கைக்குரிய எதிர்காலம் குறித்த துடிப்பான சித்திரத்தை வரைவதுடன், உலக அளவில் மேன்மையை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையையும் தேசத்திற்கு ஊட்டுகிறது என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
"நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, நமது நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் துடிப்பான படத்தை வரைகிறது, அதே நேரத்தில் உலகளாவிய மகத்துவத்தை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தேசத்திற்கு ஊட்டுகிறது. உலகளாவிய நன்மைக்காக மாற்றத்தை ஊக்குவிக்கும், அக்கறை செலுத்தும், இயக்கும் புதிய இந்தியாவாக கடந்த பத்தாண்டுகளில் பாரதம் மாறியுள்ளது. உள்ளடக்கிய வளர்ச்சியால் உந்தப்படும் உலகளாவிய பெருமையை நாடும் புதிய பாரதம். தனது காலனித்துவ அங்கியைத் துறந்து, தனது பாரம்பரியத்தையும், பாரம்பரிய விழுமியங்களையும் பெருமையுடன் அணிந்துகொண்டு, உலகம் தனது பாதையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய பாரதம். குடிமக்களால் இயக்கப்படும் நிர்வாகத்தைக் கொண்ட புதிய பாரதம், நல்லாட்சி மற்றும் ஜனநாயகத் தலைமையின் புதிய அத்தியாயத்தை எழுதும்’’என்று சமூக ஊடகத் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்..
*****
PKV/ KV
(Release ID: 2045721)
Visitor Counter : 72